பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த குரோக் ஏஐ.. எலான் மஸ்க் நிறுவனத்துக்கு 72 மணி நேர கெடு!
Notice To Grok AI | எலான் மஸ்கின் குரோக் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பலரும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அது தொடர்பாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு 72 மணி நேர கெடு விதித்து எலான் மத்திய அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது.
தொழில்நுட்பத்தின் (Technology) அதி தீவிர வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் தான் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகாவே இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் மாறிவிட்டது. என்னதான் செயற்கை நுண்ணறிவு அம்சம் வேலைகளை மிக எளிதாக செய்தாலும், மிகவும் சுலபமானதாக இருந்தாலும் அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில், எலான் மஸ்கின் குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது.
எலான் மஸ்கின் குரோக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு
உலக அளவில் ஏராளமான செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள், செயலிகள் மற்றும் இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த செயலிகளை ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர். அவ்வாறு பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் தான் ஓபன் ஏஐ, கூகுள் ஜெமினி, குரோக் ஆகியவை. இதில் குரோக் செயற்கை நுண்ணறிவு அம்சம் உலக பணக்காரர் எலான் மஸ்குக்கு சொந்தமானது. தற்போது இந்த நிறுவனத்துக்கு தான் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள்து.
இதையும் படிங்க : ரயில் ஒன் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட் புக் செய்தால் 3% தள்ளுபடி.. இந்திய ரயில்வே அசத்தல் அறிவிப்பு
உரிய சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய அரசு
எலான் மஸ்கின் குரோக் ஏஐ, பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்த புகார்கள் மத்திய அரசின் கவனத்திற்கு சென்ற நிலையில், மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் ஐடி விதிகள் ஆகியவற்றின் கீழ் எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அதாவது பயனர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் வகையில் செயற்கையாக படங்கள் மற்றும் வீடியோக்கள் குரோக் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் கணக்குகளை ரத்து செய்ய வேண்டும். மோசமாக சித்தரிக்கப்பட்ட படங்களை நீக்க வேண்டும். 72 மணி நேரத்தில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை மீறும் பட்சத்தில் உரிய சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.