Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gmail : ஜிமெயிலில் ஸ்பேம் மெயில்களை ரிப்போர்ட் செய்வது எப்படி?

Report Spam Mails In Gmail | ஜிமெயிலில் பயனர்கள் சந்திக்கும் முக்கியமான சிக்கலாக உள்ளது தான் ஸ்பேம் மெயில். இந்த நிலையில், ஜிமெயில் செயலியில் ஸ்பேம் மற்றும் மோசடி மெயில்களை ரிப்போர்ட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jan 2026 10:21 AM IST
ஜிமெயில் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகவும் சவாலாக உள்ள ஒரு அம்சம் தான் ஸ்பேம் மெயில்கள். இதன் காரணமாக பயனர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டு வந்த நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் ஜிமெயில் செயலியில் அசத்தல் அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

1 / 5
அதாவது, ஜிமெயில் பயனர்கள் தற்போது தேவையற்ற மெயில்களை ரிப்போர்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பயனர்கள் ரிப்போர்ட் செய்யப்படும் மெயில்கள், ஜிமெயிலில் உள்ள ஸ்பேம் ஃபோல்டுருக்குள் செல்லும். அவ்வாறு பயனர்கள் அதிகப்படியான ஸ்பேம் மெயில்களை ரிப்போர்ட் செய்யும் பட்சத்தில் ஜிமெயில் தானாகவே அத்தகைய மெயில்களை கண்டறிய தொடங்கும்.

2 / 5
நீங்கள் ஏதேனும் மெயிலை ரிப்போர்ட் அல்லது ஸ்பேம் ஃபோல்டருக்கு அனுப்பும் பட்சத்தில், அதனுடைய நகல் கூகுளுக்கு செல்லும். கூகுள் அந்த மெயிலை ஆராய்ந்து, அத்தகைய மோசடி மற்றும் ஸ்பேம் மெயில்களில் இருந்து பயனர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து நடவடிக்கை எடுக்கும்.

3 / 5
அதற்கு நீங்கள் முதலில் ஜிமெயில் செயலிக்குள் செல்ல வேண்டும். பிறகு நீங்கள் எந்த மெயிலை ரிப்போர்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும். பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து மெயிலை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

4 / 5
ஒருவேளை நீங்கள் தெரியாமல் வேறு ஏதேனும் மெயிலை ரிப்போர்ட் செய்து, ஸ்பேம் பகுதிக்கு அனுப்பிவிட்டால் அது குறித்து கவலைப்பட வேண்டாம். ஜிமெயில் செயலியை திறந்து, ஸ்பேம் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் எந்த மெயிலை ஸ்பேமில் இருந்து நீக்க விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து Not Spam என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் பட்சத்தில் அந்த மெயில் மீண்டும் உங்களது இன்பாக்சுக்கு சென்றுவிடும்.  

5 / 5