Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026-ல் எப்படி முதலீடு செய்வது.. இந்த சில விஷயங்களை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Tips For Investment | பொருளாதார பாதுகாப்பு வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு மிக முக்கிய ஒன்றாக உள்ளடது. இந்த நிலையில், 2026-ல் எவ்வாறு முதலீடு செய்வது, முதலீடு செய்வதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2026-ல் எப்படி முதலீடு செய்வது.. இந்த சில விஷயங்களை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Jan 2026 13:15 PM IST

நிலையற்ற பொருளாதாரம், பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. தங்களது எதிர்காலம் பொருளாதார பாதுகாப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் இதனை செய்ய வேண்டும். என்னதான் சேமிப்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் கருவியாக இருந்தாலும், பலருக்கு எதில் முதலீடு செய்வது என்ற பெரிய குழப்பம் நீடிக்கிறது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்வது, பொருளாதாரத்தை பாதுகாக்கும் வழிகளை உருவாக்குவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலீடு செய்வதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதா, தங்கம்  அல்லது நிலத்தில் முதலீடு செய்வதா என தெரியயாமல் உள்ளனர். இன்னும் சிலர் இத்தனை ஆண்டுகள் முதலீடு செய்யாமல் விட்டுவிட்டோம், இப்போது முதலீடு செய்தால் சரியானதாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்கின்றனர். ஆனால், இந்த சந்தேகங்களுக்கு முன்னதாக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உள்ளன.

இதையும் படிங்க : ஊழியர்கள் எப்போது தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

எப்படி திட்டமிட வேண்டும்?

நீங்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய உள்ளீர்கள் என்றால் அடுத்த ஆறு மாதத்திற்கு உங்களது குடும்பத்தை நடத்த எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து கணக்கிட வேண்டும். அந்த தொகையை அவசரகால நிதியாக சேமித்து வைக்க வேண்டும். காரணம் நீங்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள், வேலைக்கு செல்ல முடியாத சிக்கல் உருவாகிறது என்றால் இந்த நிதி உங்களது எந்த வித தடையும், சிக்கலும் இன்றி இயல்பாக இயங்க உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : ரயில் ஒன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% தள்ளுபடி – எப்படி பெறுவது?

உங்களுடைய வீட்டில் இருக்க கூடிய அனைவரும் மருத்துவ காப்பீடு வைத்திருப்பது அவசியமாக உள்ளது. காரணம், திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும். எனவே மருத்துவ காப்பீடு பெறுவது நிதி பாதுகாப்பை வழங்கும்.