Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஊழியர்கள் எப்போது தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

When Can Users Withdraw Their 100% of PF | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தங்களது ஊழியர்களின் தேவைக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓவில் ஊழியர்கள் எப்போது தங்களது 100 சதவீத பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

ஊழியர்கள் எப்போது தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Jan 2026 11:01 AM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள அம்சம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்குக்ளில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படுகிறது. இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிஎஃப் பயனர்கள் எப்போது தங்களது கணக்கில் இருந்து 100 சதவீத பணத்தை எடுக்க முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

13-ல் இருந்து வெறும் 5 ஆக குறைக்கப்பட்ட பிஎஃப் வகைகள்

முன்னதாக பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு 13 வகைகள் இருந்தன. அவற்றின் காரணமாக பயனர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்கும்போது கடும் குழப்பத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில், பயனர்களுக்கு பிஎஃப் பணம் எடுப்பது தொடர்பாக சந்தேகங்களை போக்கும் வகையில், 13 வகைகளை வெறும் 5 வகைகளாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மாற்றியுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் தாங்கள் எவ்வளவு பணம் எடுக்க தகுதியானவர்கள் என்பதை மிக எளிதாக தெரிந்த்துக்கொள்ள மிகவும் உதவியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : Silver : வெள்ளி வாங்கும் திட்டமா?.. இதனை கவனியுங்கள்.. அடுத்த சில மாதங்களில் தலைகீழாக மாற போகும் நிலை!

ஒரு ஆண்டு பணி சேவை

குறைந்தபட்ச பணி சேவை வரம்பை இபிஎஃப்ஓ அறிமுகம் செய்துள்ளது. பல பகுதி அளவு பண பரிவர்த்தனைக்கு ஊழியர்கள் தற்போது குறைந்தது 12 மாதங்களாவது பணியில் இருந்திருக்க வேண்டும்.

அதிக அளவிலான பிஎஃப் பணம் எடுக்க அனுமதி

இந்த புதிய விதிகளின்படி, தற்போது ஊழியர்கள் அதிக அளவு பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. முன்னதாக ஊழியர்களின் பங்களிப்பில் இருந்து 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஊழியர்களின் பங்களிப்பு, நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் வட்டி தொகை என அனைத்தும் சேர்த்து 75 சதவீதம் வரை பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் பிஎஃப் வரம்பு? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

100 சதவீத பிஎஃப் பணம் எடுக்க எப்போது அனுமதி

ஊழியர்கள் ஒரு ஆண்டு பணி செய்து முடித்த பிறகு அவர்கள் தங்களது 100 சதவீத பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதி வழங்குகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ செலவு, கல்வி செலவுகள், திருமண செலவுகள், வீடு வாங்குவது மற்றும் வீடு கட்டுவது போன்ற தேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.