ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை!
Indian Stock Market Closed Or Opened Today | ஈரான் மீதான போர் காரணமாக புவிசார் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று (மார்ச் 02, 2026) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை, மார்ச் 03 : பங்குச்சந்தை (Share Market) தினமும் இயங்கும் நிலையில், வார விடுமுறை மற்றும் அரசு பண்டிகைகளின் போது இயங்காது. அந்த வகையில் இன்று (மார்ச் 03, 2026) இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று செயல்படாது. ஈரான் மீதான போர் காரணமாக நேற்று (மார்ச் 02, 2026) பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை
ஹோலி பண்டிகை காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தையின் முக்கிய தூண்களான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ் (BSE – Bombay Stock Exchange) மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் (NSE – National Stock Exchange) ஆகிய இரண்டுமே மூடப்பட்டுள்ளது. இவற்றில் எந்த விதமான ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமாடிட்டி மார்க்கெட்டுகள் பகுதி நேரம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.2 லட்சம் வரை செல்லும்.. பகீர் கிளப்பும் பொருளாதார வல்லுநர்கள்!
பகுதி நேரம் மூடப்படும் கமாடிட்டி மார்க்கெட்டுகள்
இந்திய மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் முதல் பகுதியான காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுகிறது. மாலை 5 மணிக்கு பிறகு அதன் வர்த்தகம் தொடங்கும். இந்த நிலையில், நேஷனல் கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச் காலை மற்றும் மாலை என இரண்டு அமர்விலும் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மேற்கு ஆசியா போர்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா? நிலவரம் என்ன?
நேற்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
நேற்று (மார்ச் 03, 2026) புவிசார் பதற்றங்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதாவது இந்திய பங்குச்சந்தை 1 சதவீதம் சரிந்தது. நிஃப்டி 50 1.24 சதவீதம் சரிவை சந்தித்து 24,865.70 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. பிஎஸ்இ சென்செக்ஸ் 1.29 சதவீதம் சரிவை சந்தித்து 80,238 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.