Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெருங்கும் சம்மர்..சுற்றுலா செல்ல சூப்பர் ஸ்பாட்..இங்க ஒரு விசிட்ட போட்டு பாருங்க!

Kanyakumari Tourists Spot : தமிழகத்தில் கோடை கால விடுமுறையில் கன்னியாகுமரிக்கு சென்று குடும்பத்துடன் பொழுதை போக்கலாம். அங்கு, சுற்றுலாப் பயணிகளுக்காக கூடுதலாக 3 சுற்றுலா படகுகள் இயக்கப்பட உள்ளன. சூரிய உதயம் மற்றம் அஸ்தமனத்தை கண் கூறாக பார்க்கலாம் .

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 10 Feb 2026 14:03 PM IST
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதனிடையே, சட்டமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் தேர்வுகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு விடுமுறைகள் அறிவிக்கப்படும். இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்திருப்பர். அந்த நேரம் கோடை காலம் என்பதால் அனைவரது மனதிலும் எந்த சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம் என்ற எண்ணம் பரவலாக எழும். சிலர் அதற்கான திட்டத்தையும் தற்போது வகுக்க தொடங்கி இருப்பர். அதன்படி, தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களை பட்டியலிட்டு ஒவ்வொரு சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

1 / 5
அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும், நமது மனதில் முதலில் உதிப்பது கொடைக்கானல் அல்லது ஊட்டியே ஆகும்.தற்போது, இதற்கு மாற்றாக பல்வேறு சுற்றுலாத்தலங்கள் தமிழகத்தில் ஒளிந்துள்ளன. இதில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி ஒரு சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு, தினந்தோறும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிவது வழக்கமாகும்.

2 / 5
அதன்படி, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கடற்கரையில் இருந்து பார்க்கும்போது அந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்று மனம் இறக்கை கட்டி பறக்க தொடங்கும்.இதற்காக, துறைமுக பகுதியில் இருந்து படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். போகும் வழியில் 4 திசையிலும் நீல வண்ண நிறத்தில் கடல்கள் படர்ந்து விரிந்திருப்பது, அதில், இசைக்கு ஏற்றவாறு நடனமாடும் அலைகளையும் ரசித்தவாறு அந்த படகு பயணம் விவேகானந்தர் மண்டபத்தை சென்றடையும்.

3 / 5
அங்கு, இந்தியாவின் தலைசிறந்த சமய தலைவர்களுள் ஒருவரான விவேகானந்தர் தங்கியிருந்த மண்டபத்தை சுற்றி பார்த்துவிட்டு வெளியே வந்தால் அருகில் நம் கண்களை கட்டி இழுக்கும் வகையில் 133 அடி உயரத்தில் ஐயன் திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும். இந்த சிலைக்கு செல்ல வேண்டும் என்று முன்னதாகவே நமது மனம் திட்டமிட்டு இருக்கும். அதன்படி, விவேகானந்தர் மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ஆகாயத்தில் பறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பாலத்தில் நமது அடி வயிற்றில் ஒரு வித பயம் கலந்த அனுபவத்துடன் பாலத்தை கடந்து சென்றால் திருவள்ளுவரின் பாதத்தை சென்றடையலாம்.

4 / 5
அங்கு, முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐய்யன் திருவள்ளுவரின் சிலையை மனம் குளிர சுற்றிப் பார்க்கலாம். இதே போல, கன்னியாகுமரியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இதனிடையே, சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிக்கும் வகையில், கூடுதலாக 3 சுற்றுலா படகுகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட உள்ளன. இதனால், சுற்றுலா செல்ல விரும்பும் மக்கள் கன்னியாகுமரியையும் ஒரு தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

5 / 5