AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயக்குநர் சங்கரின் அடுத்தப் ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்

Director Shankar Next Movie Update Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இயக்குநர் சங்கரின் அடுத்தப் ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்
இயக்குநர் சங்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2026 20:19 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருகிறார். நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஜென்டில்மேன் என்ற படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தனது இயக்கத்தில் வெளியாகும் படங்களின் காட்சிகளை மிகவும் பிரமாண்டமாக அதிக பொருட் செலவில் இயக்கி வருவதாலேயே இவரை ரசிகர்களும் பிரபலங்களும் பிரமாண்ட இயக்குநர் என்று அழைத்து வருகின்றனர். இவரது இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது சங்கர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக அவரது இயக்கத்தில் வெளியாக உள்ள படங்கள் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

இயக்குநர் சங்கரின் அடுத்தப் ப்ளான் இதுதானா?

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று இந்தியன் 3. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் பாகம் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஷங்கர், புதுமுகங்களை முதன்மைக் கதாபாத்திரங்களில் வைத்து குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. ‘வேள்பாரி’ என்பது சங்கரின் கனவுத் திட்டமாகும். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட வேண்டியிருப்பதால், இது செயல்பாட்டுக்கு வர இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இத்திட்டம் மூன்று பாகங்களைக் கொண்ட ஒரு தொடராக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read… Peddi: ஒரே வாரத்தில் உலகமெங்கும்.. வசூலில் சாதனை படைத்த பெத்தி.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?

இணையத்தில் வெளியாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் – வைரலாகும் அப்டேட்

Follow Us