AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடியே அழகே என் அழகே அடியே… 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ஒரு நாள் கூத்து படம்

10 Years Of Oru Naal Koothu Movie | இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஒரு நாள் கூத்து. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அடியே அழகே என் அழகே அடியே… 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ஒரு நாள் கூத்து படம்
ஒரு நாள் கூத்து படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2026 18:06 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்தில் இதுவரை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா, டிஎன்ஏ ஆகிய படங்கள் இதுவரை வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி ஜூன் மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது ஒரு நாள் கூத்து படம். இந்தப் படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் தினேஷ், மியா, நிவேதா பெத்துராஜ், தேவ் ராம்நாத். ரித்விகா, லிங்கேஷ், கருணாகரன், ரமேஷ் திலக், பால சரவணன், நாகிநீடு, சார்லி, உஷா எலிசபெத், விசாலினி, ராம்தாஸ், சுவாமிநாதன், இ.ராம்தாஸ், பிரதீப் கே விஜயன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

Also Read… நாளை முக்கிய அப்டேட்டை வெளியிடும் சூரியின் மண்டாட்டி படக்குழு

10 ஆண்டுகளை நிறைவு செய்தது ஒரு நாள் கூத்து படம்:

மிகவும் வித்யாசமான கதையில் உருவான இந்த ஒரு நாள் கூத்து படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கெனன்யா ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் செல்வகுமார் தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து உள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் நடிகர்களாக அறிமுகம் ஆன பல நடிகர்கள் இன்றுடன் திரைத்துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சிக்மா ஸ்டைல் பாடலின் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு

Follow Us