சிக்மா ஸ்டைல் பாடலின் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு
Sigma Style BTS Video | தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் சிக்மா. இந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் சிக்மா ஸ்டைல் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அந்தப் பாடலின் பிடிஎஸ் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பிரஸ்தானம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் சந்தீப் கிஷன். இவர் தெலுங்கு சினிமாவில் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தமிழ் மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். அதன்படி நடிகர் சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இவர் தமிழ் மொழியில் அறிமுகம் ஆன இந்தப் படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் என்ற படத்தில் நடித்தார்.
இந்தப் படம் சந்தீப் கிஷனுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சந்தீப் கிஷனுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் அவ்வபோது நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக தமிழ் சினிமாவில் நடித்தப் படம் ராயன். நடிகர் தனுஷின் தம்பியாக தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.




சிக்மா ஸ்டைல் பாடலின் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு:
இந்த நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக நடித்து உள்ள படம் சிக்மா. இந்தப் படத்தினை தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ஜூலை மாதம் 31-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து சிக்மா ஸ்டைல் என்ற பாடலைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்தப் பாடலின் பிடிஎஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Gatta Kusthi 2: என் சம்பவகாரி நீதாண்டி.. கட்டா குஸ்தி 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு!!
சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Crafted in style to leave a mark. ⚡️ Step behind the scenes of #SigmaStyle from #SIGMA 🔥
Tamil 🔗 https://t.co/C4vxws6nbG
Telugu 🔗 https://t.co/C6tVt9V6wD@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram… pic.twitter.com/n09BPi8xap— Lyca Productions (@LycaProductions) June 9, 2026
Also Read… வசூலில் ரூபாய் 300 கோடிகளை நெருங்கும் பெத்தி படம் – பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் இதோ