AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொடைக்கானலில் கனமழை காரணமாக 5 இடங்களில் மண்சரிவு; தீவாக மாறிய கிராமம்

Kodaikanal Landslides Cut Off Village : கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுக்கம் கிராமத்துக்கான போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டு, அந்த கிராமம் தீவு போல மாறியுள்ளது.

கொடைக்கானலில் கனமழை காரணமாக 5 இடங்களில் மண்சரிவு; தீவாக மாறிய கிராமம்
கொடைக்கானலில் நிலச்சரிவு
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Oct 2026 19:09 PM IST

திண்டுக்கல், அக்டோபர் 24 : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுக்கம் கிராமத்துக்கான போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டு, அந்த கிராமம் தீவு போல மாறியுள்ளது. அங்கே 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தீவு போல மாறிய கிராமம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அக்டோபர் 23, 2026 நேற்று பகலில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல இடங்களில் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. கொடைக்கானலிலிருந்து அடுக்கம் வழியாகப் பெரியகுளம் செல்லும் மலைச்சாலையில், 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம்: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

மலைப் பாதையில் ராட்சதப் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்து கிடக்கின்றன. பல இடங்களில் சாலைகளில் ஆழமான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சில பகுதிகளில், சாலையின் ஒரு பகுதியே பள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளது. இதனால், அடுக்கம் கிராமத்துக்குச் செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அடுக்கம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராம மக்கள் அத்தியாவசியப் பொருட்ளை வாங்கவும், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கொடைக்கானல் அல்லது பெரியகுளத்தையே நம்பியுள்ளனர். தற்போது இரு நகரங்களுக்கும் செல்லும் வழி அடைபட்டுள்ளதால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

அடுக்கம் கிராமத்தில் விளையும் காய்கறிகளை வெளிச்சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்த காய்கறிகள் தேக்கமடைந்து வீணாகும் அபாயம் உள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, மழைநீருடன் சரிந்த மண்ணில், ஆசிரியர் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு கார் முழுமையாகப் புதைந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையினர் ஒரு சில இடங்களில் மட்டுமே மண்ணையும் பாறைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சாலைகள் இன்னும் முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிக்க : செஞ்சியில் காணாமல் போன சிறுமி விற்பனை? புதிய கோணத்தில் வழக்கு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!

மக்கள் கோரிக்கை

தொடர் மழையால் தங்கள் கிராமமே தனித்தீவாக மாறிவிட்டதாக வேதனை தெரிவிக்கும் அடுக்கம் மக்கள், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சேதமடைந்த சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, அத்தியாவசியப் பொருள்களும் மருத்துவ வசதிகளும் தடையின்றிக் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us