AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடல்

Nilgiris Red Alert : ரெட் அலர்ட் எச்சரிக்கை மற்றும் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Oct 2026 20:10 PM IST

நீலகிரி, அக்டோபர் 24 : நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் (Tourist Places) உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடல்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஊட்டியில் அக்டோபர் 24, 2026 இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பர் முதல் வருகிறது புதிய மாற்றம்

ரெட் அலர்ட் எச்சரிக்கை மற்றும் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். குறிப்பாக, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக உதகைக்குச் செல்லும் மலைப்பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைவு

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் குழுக்கள் நீலகிரிக்கு விரைந்துள்ளன. நிலச்சரிவு, மண்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவை தயார் நிலையில் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு

நீலகிரிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள், மழை ஓயும் வரையும் மாவட்ட நிர்வாகத்தின் மறு அறிவிப்பு வரும் வரையும் பயணத்தைத் தள்ளிவைப்பது நல்லது. ஏற்கெனவே நீலகிரியில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, தங்கியுள்ள இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அவசர உதவிக்கு 112 அல்லது மாவட்டப் பேரிடர் கட்டுப்பாட்டு அறையின் 1077 எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

இதையும் படிக்க : இலங்கை கடல் பகுதியில் 2 படகுகள் பறிமுதல்.. 7 பேர் அதிரடி கைது.. கடற்படை நடத்திய வேட்டை.. பரபரப்பு பின்னணி!

இது தொடர்பாக நீலகிரி ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 3 நாட்களுக்கு வானிலை சீராகும் வரை பொதுமக்கள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்கவும். அடுத்த 3 நாட்களுக்கு அவசரகால வாகனங்கள் தவிர்த்து டிஎன்ஸ்டிசி அரசு பேருந்து உட்பட அனைத்து வாகன போக்குவரத்தும் மாலை 6 மணி – காலை 7 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக பயணிப்போர் மலைப்பாதைகளை தவிர்க்கவும் என்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகள், தாழ்வான பகுதிகளில் இருந்து விலகி செல்லவும் என்றும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பொது இடங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us