AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குழந்தை இல்லை.. போதிய வருமானமில்லை.. எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை.. சென்னையில் தம்பதி சோக முடிவு!

Chennai Crime : சென்னை மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் இல்லாததாலும், போதிய வருமானம் இல்லாததாலும் மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர முடிவை எடுப்பதாக அவர்கள் முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

குழந்தை இல்லை.. போதிய வருமானமில்லை.. எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை.. சென்னையில் தம்பதி சோக முடிவு!
உயிரிழந்த கணவன்- மனைவி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Oct 2026 21:01 PM IST

சென்னை மாவட்டம், பாடி படவேட்டம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அருண்குமார் ( 41 வயது). இவரது மனைவி மாலதி ( 38 வயது). தம்பதிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அருண்குமாருக்கு சரிவர வேலை இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாலதி வீட்டில் தையல் இயந்திரம் மூலம் துணி தைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இதனிடையே, குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தாலும், குடும்பத்துக்கு தேவையான வருமானம் இல்லாததாலும் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், இருவரும் மனவேதனை அடைந்து இருந்து வந்தனர்.

பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார்

இந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை வெகு நேரமாகியும் அருண்குமாரின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. அத்துடன் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டு கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை கட்டிய நிலையில் கதவு திறக்கப்படவில்லை. பின்னர், இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

மேலும் படிக்க: இலங்கை கடல் பகுதியில் 2 படகுகள் பறிமுதல்.. 7 பேர் அதிரடி கைது.. கடற்படை நடத்திய வேட்டை.. பரபரப்பு பின்னணி!

மனைவி கத்தியால் குத்தி கொலை- கணவன் தூக்கிட்டு தற்கொலை

அங்கு, மாலதி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதே போல, அவரது கணவர் அருண்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரத பரிசோதனை மேற்கொள்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் மாலதி எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. அதில், தங்களுக்கு குழந்தை இன்றியும்,போதிய வருமானம் இன்றியும் வாழ்ந்து வந்தோம்.

போலீசாரிடம் சிக்கிய தற்கொலை கடிதம்

இதன் காரணமாக எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. இதனால், கணவர் அருண்குமார் என்னை கொன்று விட்டு, அவரும் தற்கொலை செய்து கொள்ள உள்ளார். எங்களது உயிரிழப்புக்கு யாரும் காரணம் கிடையாது என்று அதில் மாலதி எழுதி உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதி இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: திருமணமான பெண்ணை சீரழித்த காக்கி.. நான் சொன்னால் எஸ்பியே கேட்பார்.. கன்னியாகுமரி ஏட்டு மிரட்டல்!

Follow Us