Samantha: மூணு சூப்பர் ஹிட்.. அவர்தான் என்னோட Lucky Charm – சமந்தா சொன்ன பிரபலம்!
Samanthas Lucky Charm Actor: நடிகை சமந்தா ரூத் பிரபு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தற்போது செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். அதில் அவரின் Lucky Charm நடிகர் யார் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இறுதியாக வெளியான திரைப்படம் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram). தெலுங்கு பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவான இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு மெய் மாதத்தில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சமந்தா அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்து மக்களை கவர்ந்திருந்தார். இந்த படமும் சமந்தாவின் சொந்த தயாரிப்பின் கீழ் உருவான நிலையில், கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், படங்களில் நடிப்பதை தவிர்த்து சின்னத்திரை நிகழ்ச்சியில் இறங்கிவிட்டார். தமிழில் சோனி விழா தொலைக்காட்சியில் (Sony Vizha) ஒளிபரப்பாகிவரும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் (Celebrity Master Chef Show) என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். இந்த நிகழ்ச்சில் தனக்கு சினிமாவில் பிடித்த நடிகர் மற்றும் தனது Lucky Charm யார் என்பது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக வரும் பிரபல நடிகை… வைரலாகும் தகவல்
சினிமாவில் தனக்கு பிடித்த மற்றும் தன்னுடைய Lucky Charm நடிகர் குறித்து பேசிய சமந்தா:
அந்த நிகழ்ச்சியின்போது மற்றொரு தொகுப்பாளர், சமந்தாவிடம் “,சமந்தா மேம்-க்கு பிடித்த ஹீரோ என்றால் யாரை சொல்வீர்கள்? என கேட்டிருந்தார். உடனே பதிலளித்த சமந்தா, “இது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தானே.. விஜய் சார்தான். Lucky Charm எனக்கு, மூன்று சூப்பர் ஹிட்ஸ். அவர் சினிமாவில் கோடி கணக்கான ரசிகர்களுக்கு ஒரு முன்னோடி. அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு தலைவராக, அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளார். அவர் சினிமாவில் படப்பிடிப்பின்போது, மிகவும் அமைதியாக, கவனமாக மிகவும் கடுமையாக சரியான நேரத்தில் பணியாற்றுவார்” என அதில் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கண்ணும் கண்ணும்… ஆர்யாவின் ஹலோ காதல் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள்!
சமந்தா பேசியது குறித்து செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் ப்ரோமோ பதிவு:
Thalapathy fans assemble 🔥
Celebrity MasterChef தமிழ் – Tomorrow 8PM | Sony விழா & Sony LIV-ல் மட்டும்.
#CelebrityMasterChefTamil #CMCTamil #SonyVizha #SonyLIV #IdhuNammaVibe https://t.co/xny5NZ54rT
— Sony Vizha (@sony_vizha) October 22, 2026
நடிகை சமந்தா தற்போது புதிதாக ஆரம்பமாகியுள்ள சோனி விழா டிவியில் ஒளிபரப்பாகிவரும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். அந்த விதத்தில் இந்த போட்டியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பான போட்டிகள் நிலவுகிறது. அந்த விதத்தில் சமந்தா இந்த நிகழ்ச்சியில் இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் மேலும் அதிக வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.