AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Trisha: அரசியலுக்கு நீங்க வருவீர்களா மேடம்? திரிஷா கொடுத்த ரியாக்ஷன்!

Trisha Political Reaction: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் சமீபத்தில் கோவையில் ஒரு செல்போன் கடை திறப்பு விழாவுக்கு வந்த நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவரின் ரியாக்ஷன் குறித்து பார்க்கலாம்.

Trisha: அரசியலுக்கு நீங்க வருவீர்களா மேடம்? திரிஷா கொடுத்த ரியாக்ஷன்!
திரிஷாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Oct 2026 16:33 PM IST

தமிழ் சினிமாவில் நடிகையாக மக்கள் மத்தியில் பேமஸானவர் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு (Karuppu). நடிகர் சூர்யா (Suriya) நடிப்பிலும், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (Director RJ Balaji) இயக்கத்திலும் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. சூர்யா மற்றும் திரிஷாவின் கம்போ கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

சமீபத்தில் கோயம்புத்தூரில் போன் கடை திறப்பு விழாவை முன்னிட்டு வருகை தந்திருந்தார் திரிஷா. அவர் கோவை விமான நிலையத்தில் வருகையில் செய்தியாளர் ஒருவர் அரசியல் குறித்த கேட்ட கேள்விக்கு திரிஷா கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ராஜ மாதாவின் வருகை.. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுக்கும் ரம்யா கிருஷ்ணன்!

செய்தியாளரின் கேள்விக்கு திரிஷா கொடுத்த ரியாக்ஷன்:

விமான நிலையத்திலிருந்து திரிஷா வெளியே வருகையில், செய்தியாளர் ஒருவர், திரிஷாவை நோக்கி “அரசியலுக்கு நீங்க வருவீர்களா மேடம்?” என கேள்வி கேட்டார். அதற்க்கு அவர் புன்னகைத்தபடியே தனது காரில் ஏறினார். மேலும் கோயம்புத்தூர் உங்களை வரவேற்கிறது என மற்றொருவர் சொன்ன நிலையில், அதற்கு நன்றி கூறியபடியே திரிஷா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

அரசியல் கேள்விக்கு திரிஷா கொடுத்த ரியாக்ஷன் தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:

நடிகை திரிஷா இறுதியாக தமிழில் கருப்பு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இதன் பிறகு இவர் தற்போது கார்த்தியின் நடிப்பில் புதிய படத்தில் இணைகிறாராம். கார்த்தி நடிப்பில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் கார்த்தி30 படத்தில் நடிகை திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஷூட்டிங் ஓவர் – படக்குழு பகிர்ந்த வீடியோ!

கார்த்தி மற்றும் திரிஷாவின் காம்போ பொன்னியின் செல்வன் படத்தில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மீண்டும் இப்படத்தின் மூலம் இணைவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை தொடர்ந்தும் புதிய படங்களுக்கான ஒப்பந்தத்திலும் திரிஷா இருந்துவருவதாக கூறப்படுகிறது.

Follow Us