AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனி ஒருவனா? எம்.குமாரனா? கார்த்தியுடனான புது படம் எப்படி எப்படி இருக்கும்? – மோகன் ராஜா விளக்கம்!

Mohan Raja About Karthi31 Movie Plot: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் பொருவராக இருந்துவருபவர் மோகன் ராஜா. இவர் நடிகர் ரவி மோகனின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கார்த்தியின் 31வது திரைப்படத்தை இயக்கவுள்ள நிலையில், அந்த படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

தனி ஒருவனா? எம்.குமாரனா? கார்த்தியுடனான புது படம் எப்படி எப்படி இருக்கும்? – மோகன் ராஜா விளக்கம்!
கார்த்தி 31 திரைப்படத்தின் கதைச்சுருக்கம் பற்றி மோகன் ராஜாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 Sep 2026 08:17 AM IST

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படங்களை இயக்கி ஹிட் கொடுத்துவருபவர் இயக்குநர் மோகன் ராஜா (Mohan Raja). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் காட் ஃபாதர் (God Father). இந்த படத்தில் சிரஞ்சீவி (Chiranjeevi) மற்றும் நயன்தாரா (Nayanthara) போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த இப்படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தமிழில் இவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என்ற படத்தை இறுதியாக இயக்கியிருந்தார். இந்த படமானது இவருக்கு வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் எந்த படங்களையும் இயக்கவில்லை. அந்த விதத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் 31வது படத்தை இயக்கவுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் சர்தார் 2 (Sardar 2) படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மோகன் ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கார்த்தியுடன் இணையும் படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.. சர்தார் 2 படம் குறித்து சொன்ன சூர்யா!

கார்த்தியின் 31வது திரைப்படத்தின் கதை குறித்து இயக்குநர் மோகன் ராஜா சொன்ன அப்டேட்:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய இயக்குநர் மோகன் ராஜா, “கார்த்தியுடன் எனது அடுத்த படம் எம். குமரன் மற்றும் தனி ஒருவன் ஆகியவற்றின் கலவையாக இருக்கும். படப்பிடிப்பு டிசம்பர் / ஜனவரியில் தொடங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும், கார்த்தி சகோதரருக்கு நன்றி” என அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: உங்ககிட்ட இருக்க தங்கம் எப்படி வந்ததுனு தெரியுமா? வெளியானது விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படத்தின் கிளிம்ஸ் வீடியோ

கார்த்தியின் 31வது திரைப்படம் குறித்து மோகன் ராஜா கூறியதாக இணையத்தில் வைரலாகும் பதிவு:

கார்த்தியின் 31வது திரைப்படத்தை சர்தார் 1 மற்றும் 2 படங்களை தயாரித்திருந்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் 2026ம் டிசம்பர் அல்லது 2027 ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

Follow Us