AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஹீரோ பிளாப்.. கார்த்தி சார் மட்டும்தான் எனக்கு கால் பண்ணாரு – பி.எஸ்.மித்ரன் பேச்சு!

PS Mithran About Karthi: தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து ஹிட் கொடுப்பவர் கார்த்தி. இவரின் நடிப்பிலும், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புது படம் சர்தார் 2. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பி.எஸ்.மித்ரன், கார்த்தி சர்தார் படத்திற்கு ஓகே சொன்னது குறித்து பேசியுள்ளார்.

ஹீரோ பிளாப்.. கார்த்தி சார் மட்டும்தான் எனக்கு கால் பண்ணாரு – பி.எஸ்.மித்ரன் பேச்சு!
கார்த்தி பற்றி பேசிய பி.எஸ்.மித்ரன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Sep 2026 14:33 PM IST

தமிழ் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இரும்புத்திரை (Irumbu Thirai ) என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்த நிலையில், இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் நடிப்பில் ஹீரோ என்ற பேண்டஸி படத்தையும் இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது 2019ம் ஆண்டில் வெளியான நிலையில், வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக தோல்வியடைந்தது.

இந்த படத்திற்கு தோல்விக்கு பின், தான் கதை சொல்லியிருந்த எந்த நடிகர்களும் தன்னை அணுகவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தியின் (Karthi) அணுகுமுறை குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கவினின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!

கார்த்தியின் அணுகுமுறை குறித்து வெளிப்படையாக பேசிய பி.எஸ்.மித்ரன்:

அந்த பேட்டியில் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “கார்த்தி சார்கிட்ட சர்தார் கதையை சொன்னேன். மற்ற ஹீரோக்களுக்கும் கதையை சொன்னேன். அப்போதுதான் நான் இயக்கியிருந்த ஹீரோ ஃப்ளாப் ஆனதும். அதன் பிறகு, நான் கதை சொன்ன மற்ற ஹீரோக்களிடமிருந்து இருந்து போன் வரவில்லை.

இதையும் படிங்க: நீ செய்.. நீயே கண்டுபிடி… தந்தை மம்முட்டி சொன்ன அட்வைஸ் குறித்து பேசிய துல்கர் சல்மான்!

கார்த்தி சார் மட்டும் என்னைக் கூப்பிட்டு, “படம் பண்ணலாமா?..” என்று கேட்டேன், “சார்.. அந்த படம் ஃப்ளாப்.. அந்த படம் காளி.. இன்னும் என்னோட வேலை செய்யணும்.. ஏன்?” “எடுத்தல.. அது ஹிட் படம் தானே.. உனக்கு ஹிட் படம் எடுக்க தெரியும்.. வா எனக்கு இந்த கேரக்டர் புடிச்சுருக்கு” என என்னிடம் கார்த்தி சொன்னாரு” என அதில் தெரிவித்துள்ளார்.

சர்தார் 2 திரைப்படம் குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி 2-வதாக நடித்திருக்கும் படம்தான் சர்தார் 2. இந்த படமானது சிறப்பான ஸ்பை திரில்லர் கதையில் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா, ரஜிஷா விஜயன் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், நிச்சயம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us