GV Prakash: நாங்கள் பிரிந்துவிட்டோம்.. ஆனாலும் – சைந்தவி குறித்த மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்!
G.V.Prakash Kumar On Ex-wife Saindhavi: இசையமைப்பாளராக தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும், பேமஸானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் இம்மார்ட்டல் என்ற படமானது 2026ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனது முன்னாள் மனைவி சைந்தவி பற்றி மனம் திறந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவர் வெறும் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் நடிகராகவும் நடிக்கிறார். இவரின் நடிப்பில் இதுவரை 26-க்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இவர் இசையமைப்பாளாராக முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களில் பணியாற்றியிருக்கிறார். அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளியாக 2 படம்தான் இம்மார்ட்டல் (Immortal). இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்கத்தில், ஹாரர் மற்றும் காதல் கதைக்களத்தில் இப்படமானது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து இப்படம் திரையரங்குகளில் 2026 செப்டம்பர் 04ம் தேதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இதன் விளம்பரப்பணிகளும் விறுவிறுப்பாகி நடைபெற்றுவருகிறது. அண்மையில் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது முன்னாள் மனைவி சைந்தவிக்கும் (Ex-wife Saindhavi), தனக்கு இப்போது எப்படிப்பட்ட உறவு என்பது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: டபுள் டமாக்கா.. கயாடு லோஹரின் நடிப்பில் ஒரே வாரத்தில் வெளியாகும் இரு படங்கள்!
முன்னாள் மனைவி சைந்தவிக்கு, தனக்கும் இருக்கும் உறவு நிலை குறித்து பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ்:
அந்த பேட்டியில் பேசியிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், “சைந்தவி மற்றும் அன்வி (ஜி.வி.பிரகாஷின் மகள்) இருவருமே எனக்கு ஸ்பெஷல் நபர்கள். சைந்தவி இப்போதும் எனக்கு ஒரு நல்ல நண்பர்தான். எனது சிறப்பான தோழி. ஆனால் அன்வி எனது உடலில் இருக்கும் உயிர்.
இதையும் படிங்க: இது நடக்கவே நடக்காது என்ற விஷயத்தை கூட அஜித் மற்றும் விஜய் சார் நடத்தி காட்டுவார்கள் – ஓபனாக பேசிய ஜி.வி. பிரகாஷ்!
அன்வி என்னுடன்தான் பல நேரம் இருப்பார். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் அவளை வளர்க்கிறோம். நானும் சைந்தவியும் பிரிந்துவிடும், ஆனாலும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம் என அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தனது இம்மார்ட்டல் திரைப்படம் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#immortal trailer is here pic.twitter.com/pubYbS8DPo
— G.V.Prakash Kumar (@gvprakash) August 26, 2026
நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில், 2026ம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்டுவந்த படம்தான் இம்மார்ட்டல். ஹாரர், ரோமெண்டிக் மற்றும் திரில்லர் பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி வந்துள்ளதாம். மேலும் இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் வெளியாகும் நிலையில், நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.