நான் பிக்பாஸிற்கு கிடைத்த வரம்… வைரலாகும் டிடிஎஃப் வாசனின் பேச்சு!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று மற்றும் 7-வது வாரத்திற்கான இறுதி எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக இந்த நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள புரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 7-வது வாரம் முடிவுக்கு வந்தது. அதன்படி இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கடந்த 8-வது சீசன் முதல் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 47 நாட்கள் முடிவடைந்து தற்போது 48-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில் இந்த வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய போது இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒரு முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் புரோமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி தற்போது வெளியான புரோமோ வீடியோவில் ரம்யா கிருஷ்ணன் டிடிஎஃப் வாசனிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.




நான் பிக்பாஸிற்கு கிடைத்த வரம்… வைரலாகும் வாசனின் பேச்சு:
அதன்படி அந்த வீடியோவில் ரம்யா கிருஷ்ணன் யுனிக் செல்லிங் பாய்ட்ன் ஒவ்வொனா இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சொல்லுங்க என்று கூறுகிறார். அப்போது டிடிஎஃப் வாசனிடமும் அந்த கேள்வியை கேட்க அதற்கு பதிலளித்த டிடிஎஃப் வாசன் எனக்கு இந்த பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது ஒரு வரம். அதே மாதிரி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது இந்த பிக்பாஸிற்கு கிடைத்த வரம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… ராமாயணா படத்தை அனைவரும் 3டியில் பார்க்க வேண்டும் – சாய் பல்லவி!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day48 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/nBbwmFaL6F
— Vijay Television (@vijaytelevision) October 24, 2026
Also Read… ஜெயிலர் 2 படத்தைப் பாராட்டிய அல்லு அர்ஜுன் – வைரலாகும் பதிவு