AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டோரதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்

Director Karthik Subbarajs Dorothy Movie OTT Release Update | இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றப் படம் டோரதி. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

டோரதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்
டோரதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2026 18:13 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முன்பு வெளியான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை அவர் சமீபத்தில் எழுதி இயக்கி இருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது டோரதி (Dorothy Movie). இந்தப் படம் க்ரைம் ட்ராமா பாணியில் எல்ஜிபிடிக்யூ இயக்கத்தினரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரும் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டோரதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்:

இந்தப் படம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் 10-வதாக உருவாகி இருந்தது. மேலும் இது இவரது இயக்கத்தில் அதிக அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்ற படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த டோரதி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த டோரதி படம் வருகின்ற 23-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… SJ Suryah: நடிப்பு அரக்கி என்றால் அந்த நடிகைகள்தான் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!

டோரதி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கத்தி படத்தின் இந்தி ரீமேக் உரிமையைப் பெற்ற பிரபல இயக்குநர்? வைரலாகும் தக்வல்

Follow Us