Mammootty: தெறிக்கிது சியா என்ட்ரி… ஓம் படத்தின் டப்பிங்கை தொடங்கிய மம்முட்டி!
Om Movie Dubbing: தென்னந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் மம்முட்டி. இவர் பல வருடத்திற்கு பின் தமிழில் நடித்துள்ள புதிய படம்தான் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் மம்முட்டி தொடங்கியுள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிற்து.
மலையாளம் சினிமாவில் ஸ்டார் நாயகனாக பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருப்பவர்தான் மம்முட்டி (Mammootty). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மணிரத்தினம் முதல் இயக்குநர் ராம் (Ram) போன்ற பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் மம்முட்டி. அந்த விதத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம். இறுதியாக இவர் தமிழில் பேரன்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் ராம் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் ஓம் (Om Movie) . இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில், தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ளார்.
அவரின் தந்தையாக இந்த படத்தில் நடிகர் மம்முட்டி “கார்த்திகேயன்” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் டப்பிங் பணியில் மம்முட்டி இணைந்துள்ளாராம். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ராமாயணா படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் செய்த சிறப்பான விஷயம்.. அட என்ன தெரியுமா?
ஓம் திரைப்படத்தின் டப்பிங் பணியில் மம்முட்டி:
நடிகர் மம்முட்டி கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடித்துவந்த படம்தான் ஓம். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் நிலையில், அவரின் தந்தையாக மம்முட்டி நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திகேயன் என்ற அரசியல்வாதியாக மம்முட்டி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தனது கதாபாத்திரத்திற்கான ஷூட்டிங்கை மம்முட்டி முடித்த நிலையில், தற்போது ஓம் படத்தின் டப்பிங் பணியை ஆரம்பித்துள்ளாராம்.
ஓம் படத்தின் டப்பிங்கை மம்முட்டி தொடங்கியதாக வைரலாகும் பதிவு:
Mega star @mammukka Starts Dubbing for #OM
NOV 21 2026🔥
#Dhanush #Mammootty https://t.co/C3uAQVSB0T
— Movie Buff (@moviesbuff_) October 18, 2026
ஓம் திரைப்படத்தின்ப ரிலீஸ்:
இந்த ஓம் படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது செம்மர கடத்தல் தொடர்பான உண்மையான கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம்.
இதையும் படிங்க: திரையரங்குகள் அதிர்கின்றன..! ஜெயிலர் 2 படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு நன்றி சொன்ன இயக்குநர் நெல்சன்!
இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதற்க்கு பின் 2வது சிங்கிலும் விரைவில் வெளியாகும். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.