AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீழா வீரா படலுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு… இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் நெகிழ்ச்சிப் பதிவு!

Music composer Sai Abhyankar X Post | தென்னிந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் சமீபத்தில் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீரா வீழா பாடலின் லிரிக்கள் வீடியோவிற்கு மக்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வீழா வீரா படலுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு… இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் நெகிழ்ச்சிப் பதிவு!
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2026 21:23 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் தான் சாய் அபயங்கர். இவர் கடந்த 2025-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான பல்டி என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைக்க தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழ் மொழியில் அதிக அளவில் படங்களில் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் டியூட் படத்தில் இருந்து இசையமைப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் கருப்பு மற்றும் பத்தா ஆகியப் படங்கள் இவரது இசையில் வெளியாகி உள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் மொழியில் அடுத்தடுத்து ஓம், பென்ஸ் மற்றும் தனுஷ் 56 படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ராக்க படத்திலும் அவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஓம்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் நெகிழ்ச்சிப் பதிவு:

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோவான வீழா வீராஅ என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடலுக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அதுகுறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பதிவில் சாய அபயங்கர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, அனைத்து மொழிகளிலும் வீழா வீரா படத்திற்கு கிடைத்துள்ள அதீத வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது! உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி மக்களே. இது எனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டிடிஃஎப் வாசன்-ஐ உசுப்பேத்திய முகேஷ்.. மோதலில் பிக் பாஸ் வீடு – வைரலாகும் ப்ரோமோ!

சாய் அபயங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Om Movie: வீழா வீரா வா வீரா… தனுஷின் ஓம் படத்தின் ‘வீழா வீரா’ பாடல் வெளியீடு!

Follow Us