AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Krithi Shetty: அந்த நடிகையின்மீது எனக்கு க்ரஷ் இருக்கு.. கிருத்தி ஷெட்டி ஓபன் டாக்!

Krithi Shetty Celebrity Crush: தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக மக்கள் மத்தில் பேமஸானவர் கிருத்தி ஷெட்டி. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய கிருத்தி ஷெட்டி, தனக்கு பிடித்த க்ரஷ் நடிகை குறித்து பேசியுள்ளார்.

Krithi Shetty: அந்த நடிகையின்மீது எனக்கு க்ரஷ் இருக்கு.. கிருத்தி ஷெட்டி ஓபன் டாக்!
கிருத்தி ஷெட்டி Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 02 Nov 2026 08:20 AM IST

கன்னட சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிருத்தி ஷெட்டி (Krithi Shetty). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் முதல் திரைப்படமாக அமைந்திருந்ததுதான் உப்பென (Uppena Movie). கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் நாயகையாக அவர் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஷ்யாம் சிங்க ராய் திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்ததுதான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழில் நுழைந்தார்.

இதற்கு பிறகு, பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவரின் நடிப்பில் தமிழில் புதிய திரைப்படங்களும் உருவாகிவருகிறது. இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய கிருத்தி ஷெட்டி, தனக்கு பிடித்த க்ரஷ் நடிகை யார் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அரசன் திரைப்பட ரிலீஸ் தாமதம்… காரணத்தை ஓபனாக சொன்ன திருப்பூர் சுப்ரமயணம்!

நடிகை கிருத்தி ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

தனக்கு பிடித்த க்ரஷ் நடிகை குறித்து வெளிப்படையாக பேசிய கிருத்தி ஷெட்டி:

அந்த நேர்காணலில் பேசிய நடிகை கிருத்தி ஷெட்டி, அதில் சமீபத்தில் “அந்த பெண் நடிகையின் மீது எனக்கு க்ரஷ். அது திரிஷா தான். திரிஷா மேம் இப்போதும் அவர் மிகவும் அழகாக இருக்கிறார். அவர் என்னைவிடவும் இளமையாக தெரிகிறார். அவர் என்னை விடவும் மிகவும் பொலிவாக இருக்கிறார். மேலும் சினிமாவில் அவர் குறித்து பல விமர்சனங்கள் இருக்கிறது.

இதையும் படிங்க: எனது வாழ்நாள் முழுக்க தெலுங்கு சினிமாவுக்கு அதற்காக நன்றியோடு இருப்பேன் – ஸ்ருதிஹாசன்!

அவை இருந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து தனது தொழில் வாழ்க்கையில் சிறப்பான ஒருவராக இருந்துவருகிறார். அவர் எனக்கு சிறியவயதிலிருந்தே க்ரஷ். அவர் எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் அதை எதிர்கொண்டு அவர் இருந்துவருகிறார். அவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்றால் அது நுவ்வோஸ்தானென்டே நெனோடான்டானா” என அதில் கூறியுள்ளார்.

நடிகை கிருத்தி ஷெட்டியின் புதிய படங்கள்:

நடிகை கிருத்தி ஷெட்டி நடிப்பில் தமிழில் ஜீனி என்ற படமானது உருவாகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். இதற்க்கு பின் தெலுங்கில் ஜனவரி 13 விடுலா மற்றும் தும் தேரே பியார் மெய்ன் என்ற இந்தி படத்திலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us