AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசன் திரைப்பட ரிலீஸ் தாமதம்… காரணத்தை ஓபனாக சொன்ன திருப்பூர் சுப்ரமயணம்!

Arasan Film Delay: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பிலும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம்தான் அரசன். இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்து தென்னிந்திய திரையரங்கு சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அரசன் திரைப்பட ரிலீஸ் தாமதம்… காரணத்தை ஓபனாக சொன்ன திருப்பூர் சுப்ரமயணம்!
அரசன் பற்றி திருப்பூர் சுப்பிரமணியம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2026 20:37 PM IST

இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் தனுஷ் முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) என பல்வேறு நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை பார்ட் 2 (Vidathalai Part 2). இந்த படத்தில் விஜய் சேதுபதி லீட் நாயகனாக நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், இதன் பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் (Vaadivaasal) படத்தை இயக்குவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் வெற்றிமாறன் அந்த படத்தை கைவிட்டார். அதன் பிறகு கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S Thanu) தயாரிப்பில், இவர் உருவாகிவரும் திரைப்படம்தான் அரசன் (Arasan Movie).

இந்த படத்தில் சிலம்பரசன் (Silambarasan) ஹீரோவாக நடிக்க, அவருடன் பிரியங்கா மோகன் மற்றும் யோகலட்சுமி இணைந்து நடித்துவருகின்றனர். இப்படமானது 2026ம் ஆண்டு வெளியாகவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தாமதமக்கையுள்ளது. அது குறித்து தென்னிந்திய திரையரங்குகள் உரிமையாளர் சங்கம் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஓபனாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷின் ஓம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்.. எப்போது எங்கு நடைபெறும்? வெளியான அறிவிப்பு!

அரசன் பட ரிலீஸ் தாமதம் குறித்து திரையரங்குகள் உரிமையாளர் சங்கம் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திரையரங்குகள் உரிமையாளர் சங்கம் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், அதில் “நீண்ட காலமாக மக்கள் படத் தாமதங்களுக்கு சிம்புவைக் குறை கூறி வருகின்றனர். ஆனால், அவர் சிறுவயதில் இருந்ததிலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். சமீபத்தில் சிம்பு மற்றும் வெற்றிமாறனை நான் சந்தித்தபோது, ​​அனைவரும் வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர்கள் விரும்பியபடி படத்தை உருவாக்க இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார்கள். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து, தாமதத்திற்கு அவர்தான் காரணமா என்பதை நானே நேரில் பார்க்கும்படியும் சிம்பு என்னிடம் கூறினார்.

இதையும் படிங்க: முகேஷை எவிக்ஷன் ப்ரீ பாஸ் மூலம் சேவ் செய்த டிடிஃஎப் வாசன்.. முத்தழகி – கரீஷ்மா இருவரில் வெளியேறுவது யார்?

அவர், ‘நான் படப்பிடிப்புக்கு வராவிட்டாலோ அல்லது தேதிகளைக் கொடுக்கத் தவறினாலோ, நீங்கள் என்னை நேரடியாக அழைக்கலாம். நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்றார். மேலும், தனது அடுத்த படம் 120 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் எனக்கு உறுதியளித்துள்ளார். பொறுப்பேற்று, படத்தை சரியான நேரத்தில் ஒப்படைக்க அவர் தயாராக இருக்கிறார். ஒவ்வொரு படத் தாமதத்திற்கும் நாம் சிம்புவைக் குறை கூறக்கூடாது” என அதில் தெரிவித்திருந்தார்.

அரசன் திரைப்படம் குறித்து சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அரசன் திரைப்படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுவரும் நிலையில், 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாக காத்திருக்கிறது. இந்த படமானது வட சென்னை படத்தின் பின்னை கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us