தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படம் – வெளியானது அப்டேட்
I Am Game Movie OTT Release Update | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஐ அம் கேம். இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனாக மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் துல்கர் சல்மான். தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகனாக நடித்துக்கொண்டு இருந்த போதே மற்ற பான் இந்திய மொழிகளிலும் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டும் இன்றி மற்ற கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மேலும் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மட்டும் இன்றி தயாரிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் ஐ அம் கேம் படம்:
இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான படம் ஐ அம் கேம். இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் அந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஃபேண்டசி ஆக்ஷர் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது போல ஓடிடியிலும் வரிசைக்கட்டி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… அவங்க ஒண்ணுமே பண்ணமாட்டுறாங்க.. சொந்த அணியில் அக்ஷிதாவுக்கு வைக்கப்படும் ஆப்பு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The game is about to begin!
Dulquer Salmaan’s I’m Game streaming from November 6 on JioHotstar in Malayalam, Hindi, Tamil, Telugu & Kannada.
@dulQuer @NAHASKh1 @11Lohar @DQsWayfarerFilm
#ImGame #ImGameOnJioHotstar #DQ #JioHotstar https://t.co/BYLt5OHqU9
— JioHotstar Malayalam (@JioHotstarMal) October 31, 2026
Also Read… Jason Sanjay: யாருப்பா டிராக்டர்… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் இயக்குநர் இவரா?