அவங்க ஒண்ணுமே பண்ணமாட்டுறாங்க.. சொந்த அணியில் அக்ஷிதாவுக்கு வைக்கப்படும் ஆப்பு!
Bigg Boss Tamil 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 53 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 8வது வாரத்தில் கவ்பாய்ஸ் vs மாஃபியா என்ற டாஸ்க் நடந்துவருகிறது. அந்த விதத்தில் மைனிங் மாஃபியா அணியில் அக்ஷிதாவால் அந்த அணியினரிடையே கோபம் எழுந்துள்ளது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக சின்னத்திரையில் தொகுத்துவரும் நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்றுடன் (29/10/2026) கிட்டத்தட்ட 53 நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிவரும் நிலையில், மொத்தம் 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் குயிக் கன் கவ்பாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ் (Quick Gun Cowboys Vs Mining Mafias) என இரு அணிகளாக பிரிந்து சிறப்பாக டாஸ்க் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் சண்டைகள், பிரச்சனைகள் என பலவும் நடந்து இந்த நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கிவருகிறது.
அந்த விதத்தில் இந்த வாரத்தில் அக்ஷிதா அசோக்-கினால் பல பிரச்சனைகள் எழுந்துவருகிறது. இந்நிலையில் அக்ஷிதாவை மைனிங் மாபிஃயாஸ் அணியில் உள்ள மற்ற போட்டியாளர்கள் கோபத்தில் இருப்பதுபோன்ற ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நிஜமாகவே அன்லக்கிதான் போல.. பிக் பாஸில் ரூட் எடுக்கும் புது லவ் ஸ்டோரி – வைரலாகும் ப்ரோமோ!
அக்ஷிதாவால் மைனிங் மாஃபியாஸ் அணியிடையே எழுந்த பிரச்சனை:
இந்த ப்ரோமோவில், அக்ஷிதாவை அவரின் அணியில் உள்ள போட்டியாளர்கள் கோபத்தை பேசுவதுபோன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. அக்ஷிதா மைனிங் மாஃபியாஸ் அணியில் இருக்கும் நிலையில், அந்த அணிக்காக டாஸ்குகளை சிறப்பாக செய்யவில்லை. அதற்கு அவரின் அணியில் உள்ள தன்யா, கரீஷ்மா மற்றும் அஷ்மிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் இணைந்து, அக்ஷிதாவை டார்கெட் செய்து பேசியுள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட பென்ஸ் படக்குழு!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 53வது 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day53 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/Nb47Vax1Gx
— Vijay Television (@vijaytelevision) October 29, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்பது குறித்த எந்த எதிர்பார்ப்பும் இல்லை என கூறலாம். ஒருவேளை இந்த வாரத்தில் முத்தழகு இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.