சென்னையில் அதிகரிக்கும் காற்றும் மாசு.. நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சிக்கல்..
Air Pollution In Chennai: சென்னையில் கடந்த சில மாதங்களாக வெப்பமான வானிலை நிலவி வந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இத்தகைய வானிலை மாற்றங்களுக்கு இடையே காற்றின் தரத்திலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும்.
அக்டோபர் 29, 2026: சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதால், ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பாதிப்புகள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றில் உள்ள மாசுத் துகள்கள் காரணமாகச் சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக வெப்பமான வானிலை நிலவி வந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இத்தகைய வானிலை மாற்றங்களுக்கு இடையே காற்றின் தரத்திலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும்.
மேலும் படிக்க: சென்னை பிராட்வே செல்லப்பிராணிகள் சந்தைக்கு தடை! மீறுவோர் மீது கடும் நடவடிக்கை – மாநகராட்சி அதிரடி..
மழை பெய்யும்போது காற்றில் மிதக்கும் சில மாசுத் துகள்கள் தரையில் படிவதால் தற்காலிகமாகக் காற்றின் தரம் மேம்படலாம். ஆனால், மழை இல்லாத நேரங்களில் வாகனப் புகை, கட்டுமானப் பணிகளில் எழும் தூசி, தொழிற்சாலை வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மாசு மீண்டும் அதிகரிக்கலாம்.
சென்னையின் காற்றுத் தரக் குறியீடு என்ன சொல்கிறது?
அக்டோபர் 29-ம் தேதி வெளியான காற்றுத் தரக் கண்காணிப்புத் தகவல்களின்படி, சென்னையின் காற்றுத் தரக் குறியீடு (AQI) வெவ்வேறு கண்காணிப்பு தளங்களில் 100-ஐத் தாண்டிய நிலையில் பதிவாகியுள்ளது. சென்னையின் AQI 117 ஆக இருந்தது. இது ‘மோசமான காற்றுத் தரம்’ என்ற வகையைச் சேர்ந்தது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரிய திமுக பெண் கவுன்சிலர்!
காற்றில் உள்ள PM2.5 மற்றும் PM10 எனப்படும் நுண்துகள்கள் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, PM2.5 துகள்கள் மிகச் சிறியவை என்பதால் நுரையீரலின் ஆழமான பகுதிகளுக்குச் செல்லக்கூடும். நீண்டகாலமாக மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது சுவாசப் பிரச்சினைகள் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
யாரெல்லாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்?
ஆஸ்துமா நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஏற்கெனவே சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் காற்றின் தரம் குறையும் நேரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.
- அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காற்றின் தரத்தைக் கண்காணித்து, மாசு அதிகமாக இருக்கும் நேரங்களில் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
- வெளியே செல்ல வேண்டியிருந்தால், நுண்துகள்களை வடிகட்டக்கூடிய N95 போன்ற முகக்கவசத்தைப் பயன்படுத்தலாம்.
- ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலர் மற்றும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
- பூங்காக்கள், சாலையோரங்கள் போன்ற வெளிப்புற இடங்களில் கடுமையான உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்யலாம்.
- நெஞ்சுவலி, வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல் அல்லது கடுமையான இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.