AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரிய திமுக பெண் கவுன்சிலர்!

DMK Councillor Apologises : திமுக மகளிர் அணி கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதற்கு அந்தக் கட்சியின் பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம் .

முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரிய திமுக பெண் கவுன்சிலர்!
முதல்வர் விஜய்- கவுன்சிலர் சுதா தீனதயாளன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Oct 2026 20:48 PM IST

சென்னையில் கடந்த அக்டோபர் 7- ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக பெண் கவுன்சிலர் சுதா தீன தயாளன் பேசியிருந்தார். அப்போது, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்த நிகழ்வின் போது மேடையில் அமர்ந்திருந்த சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் திமுக துணை பொது செயலாளரும், எம்பியுமான கனிமொழி, முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்ததாக தமிழக வெற்றி கழகத்தினர் குற்றம் சாட்டி இருந்தனர்.

திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அநாகரிகமாக பேசியதாக திராவிட முன்னேற்ற கழக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெகவினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், போலீசார் திமுக பெண் கவுன்சிலர் சுதா தீன தயாளன் மீதும், மகளிர் அணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முரளிதரன் மீதும் பி- 2 எஸ்பிளனேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்.. நா வரேன் போட்டிக்கு.. சீமான் மாஸ் அறிவிப்பு!

ஏற்கஎனவே மன்னிப்பு கோரியதாக மனுவில் குறிப்பு

அந்த மனுவில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே மன்னிப்பு கூறியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை ( அக்டோபர் 29- ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மனுவை விசாரித்த நீதிபதி முதல்வர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஏற்கெனவே மன்னிப்பு கோரி இருந்தாலும், பொது வெளியில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதால், மன்னிப்பும் பொதுவெளியில் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். அத்துடன், திமுக கவுன்சிலர் சுதா தீன தயாளன் அளித்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையான விமர்சனம்

ஏற்கெனவே, முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எதிர்க் கட்சி துணைத் தலைவர் உதயநிதி ஸ்ாடலின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், தற்போது திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மின்வெட்டு.. நிம்மதியா தரிசனம் கூட பண்ணமுடியல.. எடப்பாடி புலம்பல்!

Follow Us