AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மின்வெட்டு.. நிம்மதியா தரிசனம் கூட பண்ணமுடியல.. எடப்பாடி புலம்பல்!

EPS Dharsan Meenakshi Amman Temple : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரி:னம் மேற்கொண்ட போது, திடீரென மின் தடை ஏற்பட்டது. இதற்கு மக்கள் நிம்மதியாக இருக்கவும் முடியல, தரிசனமும் செய்யமுடியல என்றார் எடப்பாடி.

மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மின்வெட்டு.. நிம்மதியா தரிசனம் கூட பண்ணமுடியல.. எடப்பாடி புலம்பல்!
எடப்பாடி பழனிசாமி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 Oct 2026 20:01 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் கோவிலின் உள்ளே சென்று தரிசனம் செய்ய சென்றபோது திடீரென கோவில் வளாகத்தில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின் வெட்டால் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால், பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே மின்தடை ஏற்பட்ட நிலையில், உடனடியாக கோவில் பணியாளர்கள் ஜெனரேட்டர் மூலமாக மின் இணைப்பு வழங்கினர். இதைத் தொடர்ந்து, மின் தடை சரி செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களால் நிம்மதியாக வாழ முடியல

சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மக்களால் நிம்மதியாக வாழவும் முடியவில்லை. நிம்மதியாக இறைவனை தரிசனம் செய்யவும் முடியவில்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திடீரென அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதற்கு, அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!

அதிக விலை மின்சார கொள்முதலுக்கு கடும் எதிர்ப்பு

சில இடங்களில் போராட்டங்களும், மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டங்களையும் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் மின் பற்றாக் குறையும், மின்தடையையும் சரி செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு யூனிட் மின்சாரம் வரலாற்றிலேயே இல்லாத விலைக்கு கொள்முதல் செய்ய இருப்பதாக அரசு தெரிவித்திருந்தது.

பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி

இதற்காகவே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டும் திடீர் மின்தடை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனை இருந்து வரும் நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு மின்வெட்டு பிரச்சனையை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: கைதிகள் தப்பிய சம்பவம் எதிரொலி.. சிறைத்துறை டிஜிபி திடீர் பணியிட மாற்றம்!

Follow Us