AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jason Sanjay: யாருப்பா டிராக்டர்… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் இயக்குநர் இவரா?

Jason Sanjay Acting Debut Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து, தற்போது முதல்வராக பணியாற்றிவருபவர் விஜய். இவரின் மகன் ஜேசன் சமீபத்தில் சிக்மா என்ற படத்தை இயக்கி இயக்குநராக நுழைந்தார். அந்த விதத்தில் இவர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த படத்தை இயக்குபவர் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Jason Sanjay: யாருப்பா டிராக்டர்… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் இயக்குநர் இவரா?
ஜேசன் சஞ்சய்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 29 Oct 2026 21:29 PM IST

தென்னிந்திய சினிமாவில் இளம் இயக்குநராக நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் தமிழக முதல்வர் விஜய்யின் (CM Vijay) மூத்த மகன் ஆவார். இவர் கடந்த 2026ம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் வெளியான சிக்மா (Sigma Movie) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) ஹீரோவாக நடிக்க, ஃபரியா அப்துல்லா நடிகையாக நடித்திருந்தார். இந்த திரைப்படமானது வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநர் ஜேசன் சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுவந்தது.

மேலும் ஜேசன் சஞ்சயும் நேர்காணல்களில் ஹீரோவாக நடிப்பது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். சிக்மா படத்திற்கு பின் இவர் ஹீரோவாக படங்களில் நடிக்கவுள்ள நிலையில், அந்த படத்தை எந்த இயக்குநர் இயக்கவுள்ள ?, தயாரிப்பு நிறுவனம் எது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தி ஒன் ஆன் டியூட்டி… சூர்யாவின் சீன் படத்தின் ஆடியோ & ட்ரெய்லர் லான்ச் எப்போது? வெளியான அப்டேட்!

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இயக்குநர் இவரா?:

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான நிலையில், அவருக்கு அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இவர் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ், சஞ்சீவ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வேறு ஒரு இயக்குநரின் இயக்கத்தில் ஜேசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்ன சொல்வதென்றே தெரியல.. பெடி பட தனது கதாபாத்திரத்தின் மீது எழுந்த விமர்சனம் குறித்து ஜான்வி கபூர் ஓபன்!

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தை இயக்கியிருந்த கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், ஜேசன் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். இந்த படத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான அட்லீயின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் மற்றும் கீர்த்திஸ்வரன் கூட்டணி குறித்து வைரலாகும் பதிவு:

ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், கீர்த்திஸ்வரன் இயக்குகிறாரா?, அல்லது சஞ்சீவ் இயக்குகிறாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. விஜய்க்கு பிறகு ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us