AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜி.வி.பிரகாஷின் குரலில்.. துல்கர் சல்மானின் ஏஒடி படத்திலிருந்து ‘ராதே ராதே’ பாடல் வெளியீடு!

Radhe Radhe Song: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கில் நடித்துவந்த திரைப்படம்தான் ஆகாசம்லோ ஓகா தாரா. இந்த படமானது ரிலீஸிற்கு தயாராகிவரும் நிலையில், இப்படத்திலிருந்து ராதே ராதே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷின் குரலில்.. துல்கர் சல்மானின் ஏஒடி படத்திலிருந்து ‘ராதே ராதே’ பாடல் வெளியீடு!
ராதே ராதே பாடல் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2026 12:30 PM IST

மலையாள சினிமாவில் நடிகராக நுழைந்து, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நாயகனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஐஆம் கேம் (Im Game Movie). இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்துவந்தார். அதில் ஒரு திரைப்படம்தான் ஆகாசம்லோ ஓகா தாரா (Aakasamlo Oka Tara Movie). இந்த படத்தை இயக்குநர் பவன் சாடினேனி (Director Pavan Sadineni) இயக்க, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) மற்றும் சாத்விகா வீரவல்லி (Satvika Veeravalli) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் நவம்பர் இறுதியில் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், தற்போது “ராதே ராதே” என்ற பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது. இதை ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யாருப்பா டிராக்டர்… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் இயக்குநர் இவரா?

ஆகாசம்லோ ஓகா தாரா படக்குழு பகிர்ந்த ராதே ராதே பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

இந்த ஆகாசம்லோ ஓகா தாரா திரைப்படத்தை இயக்குநர் பவன் சாடினேனி இயக்க, கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தில் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் சிறப்பான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஒரு பெண்ணின் கனவு மற்றும் சாதனையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: RC17 திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் இளம் நடிகை.. அட இவரா?

இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கிருஷ்ணா என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், சிறப்பாக அவரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது சிறப்பாக தயாராகியுள்ளதாம். இந்த படம் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us