IPL 2027: மும்பை பேட்டிங் பயிற்சியாளராக உத்தப்பா.. களம் காணும் புதிய பயிற்சிக் குழு!
MI's New Coaching Staffs: ஐபிஎல் 2027 சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி முற்றிலும் புதிய பயிற்சி ஊழியர்களை அறிவித்துள்ளது. கீரன் பொல்லார்ட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராகவும், மிட்செல் மெக்லெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், டி. திலீப் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் இணைந்துள்ளனர்.
ஐபிஎல் 2027-க்காக (IPL 2027) மும்பை அணி முற்றிலும் புதிய பயிற்சி ஊழியர்களைக் கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர் கீரன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இந்தநிலையில், தற்போது தங்களது அணிக்கு புதிய பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மும்பை அணி நிர்வாகம் இன்று அதாவது 2026 அக்டோபர் 30ம் தேதி அறிவித்தது. அதன்படி, ராபின் உத்தப்பா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராகவும், தவால் குல்கர்னி மேம்பாட்டுப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: ஹர்திக்கை பரிமாற்றம் செய்ய திட்டமிடும் மும்பை..? அஸ்வின் வெளியிட்ட தகவல்!




புதிய பயிற்சியாளர் குழுவை அறிவித்த MI:
Mumbai Indians today announced the appointment of Robin Uthappa as Batting Coach, Mitchell McClenaghan as Bowling Coach, T. Dilip as Fielding Coach and Dhawal Kulkarni as Development Bowling Coach for the upcoming IPL 2027 season.
They will join Head Coach Kieron Pollard as part of a new-look coaching group that brings together a strong understanding of the Mumbai Indians culture, extensive international experience and a shared commitment to developing talent and delivering success.
https://t.co/cA7yI5Khpk
— Mumbai Indians (@mipaltan) October 30, 2026
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அதாவது 2026 அக்டோபர் 30ம் தேதி தங்களது சமூக வலைதளங்களில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கீரன் பொல்லார்டுக்குப் பதிலாக, ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி. திலீப், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளராக இணைந்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மிட்செல் மெக்கலெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், முன்னாள் கிரிக்கெட் வீரர் தவால் குல்கர்னி மேம்பாட்டுப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2027-ல் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி ஊழியர்கள்
ஐபிஎல் 2027 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முற்றிலும் புதிய பயிற்சி ஊழியர்களுடன் செயல்பட உள்ளது. இதற்கு முன்பு மஹேல ஜெயவர்தனே வகித்த தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கீரோன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், லசித் மலிங்கா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நியூசிலாந்தின் மிட்செல் மெக்கலெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ALSO READ: பொல்லார்ட்க்கு பெருமை சேர்த்த தருணம்.. பயிற்சியாளராக நியமித்த மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் குழு:
- தலைமைப் பயிற்சியாளர் – கீரன் பொல்லார்ட்
- பேட்டிங் பயிற்சியாளர் – ராபின் உத்தப்பா
- பந்துவீச்சுப் பயிற்சியாளர் – மிட்செல் மெக்லெனகன்
- ஃபீல்டிங் பயிற்சியாளர் – டி திலீப்
- மேம்பாட்டு பந்துவீச்சுப் பயிற்சியாளர் – தவால் குல்கர்னி
பயிற்சியாளர் குழுவில் ஏற்பட்ட மாற்றம், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள்ளும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற யூகங்கள் நிலவி வரும் நிலையில், அனைவரின் கவனமும் மும்பையின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலின் மீதே உள்ளது. ஐபிஎல் 2027-க்கான தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட அனைத்து அணிகளுக்கும் வருகின்ற 2026 நவம்பர் 15ம் தேதி வரை அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.