AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விமானத்தை விட 3 மடங்கு உயரம்.. மினி சாட்டிலைட்டை விண்ணில் ஏவிய மாணவர்கள்.. கோவையில் நடந்த நிகழ்வு!

Govt School Students Launch Mini Satellite : கோவையில் அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய மினி சாட்டிலைட்டை ஹீலியம் பலூன் மூலமாக விண்ணில் ஏவினர். அந்த சாட்டிலைட் சுமார் 35 கிலோ மீட்டர் உயரம் பறந்து பின்னர் பூமியை அடைந்தது.

விமானத்தை விட 3 மடங்கு உயரம்.. மினி சாட்டிலைட்டை விண்ணில் ஏவிய மாணவர்கள்.. கோவையில் நடந்த நிகழ்வு!
விண்ணிலி ஏவப்பட்ட மினி சாட்டிலைட்.
Sekaran S
Sekaran S | Published: 30 Oct 2026 14:36 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய மினி சாட்டிலைட் போன்ற வளிமண்டல ஆய்வு கருவி ஹீலியம் பலூன் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் மாநகராட்சி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பல்வேறு கருவிகளை கண்டுபிடித்து வருகின்றனர். அதில் ஒன்றாக வளிமண்டல ஆய்வுக் கருவி ஒன்றை பல நாட்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கருவி முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், அதனை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை ஆசிரியர்களுடன் இணைந்து மேற்கொண்டு வந்தனர். அதன்படி, வளிமண்டல கருவி விண்ணில் ஏவப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாக முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அரசு நடுநிலைப் பள்ளியில் இருந்து வளிமண்டல ஆய்வு கருவி ஹீலியம் பலூன் மூலமாக இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 30- ஆம் தேதி) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

விமானம் பறக்கும் உயரத்தை விட 3 மடங்கு உயரம்

பள்ளியில் இருந்து ஏவப்பட்ட இந்த கருவியானது சுமார் மூன்று மணி நேரம் பயணம் மேற்கொண்டு அதிகபட்சமாக 35 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றது. இந்த தொலைவானது சாதாரண வணிக விமானங்கள் பறக்கும் உயரத்தை விட 3 மடங்குக்கும் அதிகமான உயரம் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், விண்ணில் ஏவப்பட்ட வளிமண்டல ஆய்வு கருவி எந்த மாதிரி வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்யும் வகையில் தனி டிஸ்ப்ளே மூலமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ரூ.5000 கோடி நிதி மோசடி வழக்கு.. சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பிரேம்குமார்!!

வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம் ஆகியவை கண்கீடு

இதில், வளிமண்டல ஆய்வு கருவி பூமியின் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றழுத்தம் ஆகியவற்றை கணக்கிடும் சென்சார்கள், காற்றில் உள்ள நுண் துகள்களை சேகரிக்கும் கருவி என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பூமியில் அதிக அளவிலான வெப்பம் மற்றும் குளிர் ஆகியவற்றை தாங்கிக் கொள்ளும் வகையில் சுமார் மைனஸ் டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் குளிரையும் தாங்கி, சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் அந்த கருவி தரை இறங்கியது.

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரங்களை தொடுமா

அதனை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பத்திரமாக மீட்டனர். இதில், குறிப்பாக 55 அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பில் உருவான இந்த முயற்சி, அவர்களுக்கு புத்தகத்தில் படிக்கும் அறிவியலை நேரடி ஆராய்ச்சியாக மாற்றி உள்ளது. சிறுவயதிலேயே விண்ணை தொட்ட இந்த மாணவர்களின் கனவு நாளை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரங்களை தொடும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க: ஆந்திராவை நோக்கி நகரும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! வட தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? பிரதீப் ஜான் சொல்வது என்ன?

Follow Us