ரூ.5,000 சரிந்த தங்கம் விலை.. மேலும் விலை குறையுமா?.. தங்கத்தின் நிலை தான் என்ன?
Gold Price Drop In 2026 | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.5,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்த சரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறும் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கு பிறகு சந்தித்த தொடர் சரிவின் காரணமாக தங்கம் விலை தற்போது இந்த நிலையில் உள்ளது. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.20,000-த்தை தாண்டு என கூறப்பட்டது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அக்டோபர் மாதத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.5,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் இத்தகைய சரிவை சந்திக்க முக்கிய காரணிகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே மாதத்தில் ரூ.5,000 சரிந்த தங்கம் விலை
2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை இடையில் கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து தற்போது தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதாவது அக்டோபர் 01, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,680-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே இன்று (அக்டோபர் 30, 2026) ஒரு கிராம் தங்கம் ரூ.13,040-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.5,000-க்கு மேல் சரிவை சந்தித்துள்ளது.




இதையும் படிங்க : எப்போது கார் வாங்கினால் லாபம்? தீபாவளியா? அல்லது டிசம்பர் மாதமா? விவரம் இதோ!
தங்கம் விலை சரிய காரணம் என்ன?
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புவிசார் பதற்றங்கள் அதிகமாக இருந்ததன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அதன் பிறகு ஏற்பட்ட ஈரான் மற்றும் அமெரிக்க மோதல் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து திரும்பியது.
இதையும் படிங்க : Gold Price : இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ரூ.1,200, ரூ.5,000 சரிவு!
அதன்பிறகு தங்கம் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்திக்க தொடங்கியது. இந்த நிலையில் தான் உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளதால் தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் விற்பனை செய்யப்படும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.