AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி பண்டிகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்த மத்திய அரசு!

Central Govt Employees DA Hike | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படும். அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்த மத்திய அரசு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Oct 2026 11:46 AM IST

தீபாவளி பண்டிகை (Diwali Festival) நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு (Central Government Of India) இனிமையான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, அகவிலைப்படி (DA – Dearness Allowance) உயர்வு குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளியை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வை அறிவித்த அரசு

மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வை வழங்கும். முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும், ஆனால் அது மார்ச் மாதத்தில் தான் அறிவிக்கப்படும். இதேபோல இரண்டாவது அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வரும். ஆனால், அது தீபாவளி பண்டிகையின்போது அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளியை ஒட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Gold Price : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. திடீர் மாற்றத்தின் காரணம் என்ன?

3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பின் மூலம் சுமார் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் 48 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர்.

இதையும் படிங்க : தீபாவளிக்கு கார் – பைக் வாங்கபோறீங்களா? இந்த 6 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

63 சதவீதமாக உயரும் அகவிலைப்படி

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 60 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 3 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது 63 சதவீதமாக உயரும். இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.18,000 வாங்கும் அர்சு ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 10,800-ல் இருந்து ரூ.11,340 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us