AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போலி இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் பேராசிரியர் கைது? டிஜிபியிடம் பரபரப்பு புகார்

Fake Instagram Account Issue : போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பான விவகாரத்தில், அதிகாலை நேரத்தில் தன்னை வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, பொருளாதாரப் பேராசிரியர் கலையரசன் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.

போலி இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் பேராசிரியர் கைது? டிஜிபியிடம் பரபரப்பு புகார்
கலையரசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Oct 2026 12:02 PM IST

சென்னை, அக்டோபர் 29 : போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பான விவகாரத்தில், அதிகாலை நேரத்தில் தன்னை வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, பொருளாதாரப் பேராசிரியர் கலையரசன் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டிஜிபியிடம் பரபரப்பு புகார்

சென்னை அடையாறில் வசிக்கும் கலையரசன், சென்னையில் உள்ள வளர்ச்சி ஆய்வுகளுக்கான மெட்ராஸ் நிறுவனத்தில் பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரை விலைவாசி உயர்வு குறித்து பதிவிட்டதாகவும் அதற்காக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்.. தமிழ்நாடு அரசு அரசாணை!

இந்த நிலையில் டிஜிபி அலுவலகத்துக்கு இணையவழியில் கலையரசன் அளித்துள்ள புகாரில், கடந்த அக்டோபர் 28, 2026 அதிகாலை சுமார் 5 மணிக்கு, சீருடை அணியாத மூன்று காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. காமாட்சிக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் அவதூறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி, விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரைத் தனக்குத் தெரியாது என்றும் அவர் போலீஸாரிடம் விளக்கியுள்ளார். ஆனால், அவரது கைப்பேசியைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வாடகைக் காரில் அவரை அழைத்துச் சென்றதாகவும், இதுகுறித்துக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க அனுமதிக்கவில்லை எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

போலிக் கணக்கில் தனது புகைப்படம்

விசாரணையின்போது, போலீஸார் காட்டிய ‘@youvijayamani’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது புகைப்படம் இடம்பெற்றிருந்ததாகக் கலையரசன் தெரிவித்துள்ளார். அந்தக் கணக்கு தன்னுடையது அல்ல என்றும், இணையத்திலிருந்து தனது புகைப்படத்தை எடுத்து, யாரோ போலிக் கணக்கை உருவாக்கியிருக்கலாம் என்றும் அவர் போலீஸாரிடம் விளக்கமளித்துள்ளார். இதையடுத்து, காலை 7.45 மணியளவில் அவரை மீண்டும் வீட்டில் இறக்கிவிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தன்னை அழைத்துச் சென்ற காவலர்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியவர்களைக் கண்டறிந்து, சட்டப்படி தண்டிக்க வேண்டும். தன் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த வழக்குடன் தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிக்க : வீட்டில் இருந்த பெண் கொடூர கொலை.. நகைக்காக தங்கை மகன் வெறிச்செயல்.. பகீர் சம்பவம்!

ஸ்டாலின் கண்டனம்

இந்தச் சம்பவத்துக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காகவே கலையரசன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தவெக அரசின் உச்சகட்ட பாசிசம் என விமர்சித்துள்ள அவர், தமிழகக் காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரும் கலையரசனிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow Us