AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அரசு அனுமதி

Electricity Board Job Vacancies : தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் செய்யத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், மின்வாரியத்தில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அரசு அனுமதி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Oct 2026 10:01 AM IST

சென்னை, அக்டோபர் 29 : தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் செய்யத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், மின்வாரியத்தில் (Electricity Board) ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.

மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர் பணியிடங்கள்

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்கள் இரண்டு கட்டங்களாக நிரப்பப்பட உள்ளன. முதல் கட்டமாக அடுத்த 2027 ஆம் ஆண்டு 5000 கள உதவியாளர்கள் நிரப்பபப்டவுள்ளனர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வருகிற 2028 ஆம் ஆண்டு 3000 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஆண்டுக்கு ரூ.341.26 கோடி அரசுக்கு செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு – நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு

புதிதாக நியமிக்கப்படும் 8,000 கள உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்க, ஆண்டுக்கு ரூ.341.26 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒருவருக்குச் சராசரியாக மாதம் சுமார் ரூ.35,500 செலவாகும். இதுதொடர்பாக மின்வாரியத் தலைவர் அனுப்பிய கருத்துருவைப் பரிசீலித்த தமிழக அரசு, தற்போது இந்தப் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளித்துள்ளது.

களப் பணியாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு

மின் கம்பங்களில் ஏறிப் பழுது நீக்குதல், மின் இணைப்பு வழங்குதல், மின் தடையைச் சரிசெய்தல் உள்ளிட்ட களப் பணிகளில் கள உதவியாளர்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, மழை, புயல் போன்ற பேரிடர்க் காலங்களில் மின் விநியோகத்தை விரைவாகச் சீரமைப்பதில் இவர்களே முன்னணியில் இருப்பார்கள். நீண்ட காலமாக நிலவி வரும் களப் பணியாளர் பற்றாக்குறையை இந்த நியமனம் ஓரளவு போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.165 ஆக உயர்ந்த நிலக்கடலை விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி!

புதிய வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்பு

மின்வாரியப் பணிக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுத் துறைகளில் ஒப்பந்தப் பணியாளர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மின்வாரியத்தில் 8,000 நிரந்தரப் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

Follow Us