முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
DVAC Raids KN Nehru : திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், அக்டோபர் 29, 2026 இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, அக்டோபர் 29 : திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், அக்டோபர் 29, 2026 இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் (Vigilance Officials Raid) அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிடங்களை நிரப்புவதில் முறைககேடு நடைபெற்ற குற்றச்சாட்டில் அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலக வளாகத்துக்கு அக்டோபர் 29, 2026 இன்று காலை 3 பொலிரோ வாகனங்களில் வருகை தந்த 15க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர், தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர சோதனையைத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு கருதி வீட்டின் நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.165 ஆக உயர்ந்த நிலக்கடலை விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி!




நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்து, சுமார் ரூ.634 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான வழக்கு விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண நேரத்தில் சோதனையால் பரபரப்பு
இதற்கிடையே வரும் அக்டோபர் 16, 2026 அன்று கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்த திடீர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருமண சுபநிகழ்ச்சி நெருங்கும் வேளையில் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஆவணங்கள் மற்றும் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில், சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டிஜி.பிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சென்னை உயர்நதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – எங்கெல்லாம் மழை பெய்யும்?
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்து, உத்தரவிட்டது. இதற்கு எதிராக கே.என்.நேரு ஊச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இதற்கிடையில் கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.