AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – எங்கெல்லாம் மழை பெய்யும்?

Tamil Nadu weather today : வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலைகொண்டுள்ளது. இதன் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather forecast: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – எங்கெல்லாம் மழை பெய்யும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Oct 2026 06:40 AM IST

சென்னை,அக்டோபர் 29 : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அர்னாப் புயல் அக்டோபர் 28, 2026 நேற்று ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலைகொண்டுள்ளது. இதன் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஜெம் வீரமணி வழக்கில் சிக்குகிறாரா ஜான் பாண்டியன்.. புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை.. முழு விவரம் என்ன!

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு?

இதற்கிடையில் 2026 அக்டோபர் 29, 30 ஆகிய 2 நாட்கள் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மாநிலத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக் 31 முதல் நவம்பர் 1, 2026 ஆகிய 2 நாட்கள் லேசானது முதல் மிதமான மழையும், நவம்பர் 2, 2026 அன்று வட தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நவம்பர் 3, 2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இதற்கிடையே வருகிற 2026 நவம்பர் 1 முதல் தமிழகத்தில் மழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழையின் செயல்பாடு குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக மேற்குத் திசைக் காற்றின் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பகல் நேரங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலையுடன் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவக்கூடும்.

பகல் நேர வெப்பநிலை இயல்பை விட சுமார் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், 2026 நவம்பர் 1ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தயாராகும் முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகம்: என்னென்ன வசதிகள்?

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அவ்வாறு உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட கடலோர தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென்கோடி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். வரும் நாட்களில் வானிலை மாற்றங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow Us