AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர் சூர்யாவின் சீன் படத்தின் கதைச் சுறுக்கம் இதுதானா? வைரலாகும் தகவல்

Scene Movie Synopsis Viral On Social Media | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தின் கதைச் சுறுக்கம் என்ன என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யாவின் சீன் படத்தின் கதைச் சுறுக்கம் இதுதானா? வைரலாகும் தகவல்
சீன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2026 12:02 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து 46 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முன்னதாக இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில் அடுத்ததாக தற்போது மூன்றாவது படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தாக வெளியாக உள்ள படம் சீன்.

இயக்குநர் ஜித்து மாதவன் இந்த சீன் படத்தை எழுதி இயக்கி உள்ளார். படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவின் சீன் படத்தின் கதைச் சுறுக்கம் இதுதானா?

இந்த நிலையில் சீன் படத்தின் கதை சுறுக்கம் குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி சினிமா வட்டாரங்களில், கோவிட் காலத்தில் ஒரு காவலர் விசாரித்த வழக்கின் ஒரு சிறு பகுதி, தற்போதைய காலக்கட்டத்துடன் இணைக்கப்பட்டு வெளிப்படுகிறது. படம் முழுவதுமே டார்க் காமெடி பாணியில், ஒரு காவலருக்கும் மனநலம் பிறழ்ந்த கொலையாளிக்கும் இடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. இது ஒரு முழுமையான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படம்; இதில் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான தருணங்கள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. சூர்யா மற்றும் நாசலான் ஆகிய இருவருமே தங்கள் நடிப்பால் அசத்தியுள்ளதாகவும், படத்தில் இடம்பெற்றுள்ள அவர்களின் வசனங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read… கடும் நெடும் பயணங்கள்… டோரதி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யாவின் சீன் படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்

Follow Us