AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது ஏஜிஎஸ் சினிமாஸ் – அப்டேட் இதோ

OM movie theatrical release rights update | தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் திரையரங்க உரிமையை பிரபல ஏஜிஎஸ் சினிமாஸ் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது ஏஜிஎஸ் சினிமாஸ் – அப்டேட் இதோ
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2026 11:31 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஓம் சாப்டர் ஒன். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த ஓம் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அமரன் படத்தினை போல இந்த் ஓம் படமும் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இதில் இதுவரை தனுஷ், மம்முட்டி மற்றும் சாய் பல்லவியின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது ஏஜிஎஸ் சினிமாஸ்:

அதன்படி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமையைப் எந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஓம் படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் சினிமாஸ் பெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Jiiva: ஆர்யா எப்போதுமே அப்படிதான்.. காமெடியாக ஜீவா பகிர்ந்த விஷயம்!

ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் டாஸ்கின் போது மோதிக்கொள்ளும் டிடிஎஃப் வாசன் – அக்‌ஷிதா… வைரலாகும் வீடியோ!

Follow Us