AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. திடீர் மாற்றத்தின் காரணம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. திடீர் மாற்றத்தின் காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Oct 2026 10:48 AM IST

சென்னை, அக்டோபர் 28 : தொடர் சரிவுக்கு பிறகு தங்கம் விலை (Gold Price) தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று 4வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவுக்கு பிறகு உயர்வை சந்திக்க தொடங்கிய தங்கம்

கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருவது ஆகியவை தங்கத்தின் விலையில் கடும் சரிவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தங்கம் தொடர் சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லும் சூழல் உருவானது. இந்த நிலையில் தான், தற்போது தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : Gold Price : தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. மேலும் விலை உயருமா?

தங்கத்தின் மீதான முதலீடுகள் மற்றும் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் தங்கம் விலை உயர்வை சந்திக்கும். தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், தொடர் சரிவில் இருந்து மீண்டும் தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று நான்காவது நாளாக தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : ரூ.250-ல் தொழில் தொடங்கி சாதித்த கேரள தம்பதி.. ரூ.80-90 லட்சம் ஆண்டு வருமானம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,195-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,395-க்கு, ஒரு சவரன் ரூ.1,15,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us