AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உடற்பயிற்சியே இல்லாமல் இரத்த சர்க்கரையை ஈஸியா கட்டுப்படுத்தலாம்!

Exercise Routine: உடற்பயிற்சி செய்ய முடியாத சூழலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் பல்வேறு எளிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அலுவலக வேலை பளு மற்றும் நேரமின்மை காரணமாக பலரால் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. இந்நிலையில், உணவுமுறை மற்றும் எளிய பழக்கவழக்கங்கள் மூலம் சர்க்கரை அளவை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதைப் பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம்.

உடற்பயிற்சியே இல்லாமல் இரத்த சர்க்கரையை ஈஸியா கட்டுப்படுத்தலாம்!
மாதிரி புகைப்படம்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 28 Oct 2026 10:30 AM IST

அலுவலக வேலைப் பளு மற்றும் நேரமின்மை காரணமாக பலரால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. எனினும், முறையான உடற்பயிற்சி இல்லாமல் கவனமான உணவு முறை மற்றும் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோய் அல்லது முந்தைய நிலை உள்ளவர்கள் தங்கள் சர்க்கரை அளவைத் தவறாமல் கண்காணித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். அரிசி மற்றும் ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளுடன் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து உட்கொள்வது மிகவும் சிறந்தது. சுத்திகரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளைத் தேர்ந்தெடுப்பது இரத்த சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது. உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது அல்லது அலுவலகத்தில் அவ்வப்போது எழுந்து நடப்பது போன்ற சிறிய உடல் அசைவுகள் தசைகள் குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்த உதவுகின்றன.

Also Read: என்றென்றும் இளமையாக தெரியணுமா? இந்த 10 விஷயங்களை பண்ணுங்க!

உடற்பயிற்சி இல்லாமல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியுமா?

அதிகப்படியான வேலை பளு, நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது மற்றும் பிஸியான அட்டவணை போன்ற காரணங்களால் பலரால் முறையான உடற்பயிற்சி வழக்கத்தை பின்பற்ற முடிவதில்லை. முறையான உடற்பயிற்சி இல்லாமல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. மும்பை வோக்கார்ட் மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர் டாக்டர் பிரணவ் கோடியின் கூற்றுப்படி, முறையான உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் கவனமான உணவு முறை, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுதல், போதுமான தூக்கம் மற்றும் தேவைப்படும் பட்சத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மூலம் இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க முடியும். இருப்பினும் இந்த அணுகுமுறை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட உடல்நலம் மற்றும் அவர்களுக்கு நீரிழிவு நோய் அல்லது அதற்கு முந்தைய நிலை (Prediabetes) உள்ளதா என்பதைப் பொறுத்து மாறுபடும்.

உணவு முறை மாற்றங்கள் சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன?

உணவு முறை மாற்றங்கள் மட்டுமே அனைவருக்கும் முழுமையான தீர்வாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோய் அல்லது முந்தைய நிலை உள்ளவர்கள் தங்கள் குளுக்கோஸ் அளவை தவறாமல் கண்காணித்து மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியமாகும். அரிசி, ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், காய்கறிகள், தயிர், முட்டை மற்றும் நட்ஸ்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சீரான உணவை உருவாக்க உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக முழு தானியங்களையும் நார்ச்சத்து மிக்க உணவுகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், சர்க்கரை கலந்த பானங்கள், மிட்டாய்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை அளவோடு உட்கொள்வது நல்லது. ஒரே நேரத்தில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பதைத் தவிர்த்து, சரியான இடைவெளியில் சீரான அளவில் உணவை உட்கொள்வது இரத்த சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்க உதவும்.

Also Read: என்றென்றும் இளமையாக தெரியணுமா? இந்த 10 விஷயங்களை பண்ணுங்க!

சிறிய உடல் அசைவுகள் இரத்த சர்க்கரையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் பகலில் செய்யும் சிறிய அசைவுகள் கூட இரத்த சர்க்கரை மேலாண்மையில் முக்கியப் பங்காற்றுகின்றன. உணவுக்குப் பிறகு ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வது, அலுவலகக் கூட்டங்களுக்கு இடையில் சிறிது நேரம் எழுந்து நிற்பது, படிகளில் ஏறுவது அல்லது போனில் பேசும்போது சுற்றி நடப்பது போன்ற எளிய செயல்கள் தசைகள் குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்த உதவுகின்றன. உணவுக்குப் பிறகு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நடப்பது கூட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். கடினமான வேலை பளு உள்ளவர்களுக்கு இந்த சிறிய அசைவுகள் ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாக அமைகின்றன. எனினும், நீண்ட கால ஆரோக்கியத்திற்கு உணவுமுறை, உடல் எடை, தூக்கம், மன அழுத்தம் மற்றும் மரபியல் காரணங்களுடன் உடல் உழைப்பும் அவசியமான ஒன்றாகவே தொடர்கிறது.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us