ரிஸ்க் இல்லாத லாபத்தை தரும் சிறந்த திட்டங்கள்.. 100% அரசு பாதுகாப்பு.. என்ன என்ன தெரியுமா?
Safe Investment Plans | சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்தால் தான் நிதி பாதுகாப்பு பெற முடியும். இந்த நிலையில், ஜீரோ ஆபத்துக்களை கொண்ட அரசின் பாதுகாப்புடன் கூடிய திட்டங்கள் குறித்தும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் மட்டும் தான் அதனை பல மடங்காக உயர்த்த முடியும். இல்லையென்றால் பணவீக்கம், நிதி பற்றாக்குறை ஆகிய சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். இந்த நிலையில் தான், ஏராளமான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்யும்போது நல்ல லாபத்தை பெற முடியும். ஆனால், சில திட்டங்களில் சந்தை அபாயங்கள் உள்ளன. எனவே, எந்தவித பாதுகாப்பு சிக்கல்களும் இல்லாத சில திட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், சிக்கல் அற்ற சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆர்பிஐ வெளியிடும் ப்ளோடிங் ரேட் பண்ட்ஸ்
இந்த ஆர்பிஐ ஃப்ளோடிங் ரேட் பண்ட்ஸ், இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மத்திய அரசு வெளியிடும் பத்திரம் ஆகும். இதன் காரணமாக இவற்றுக்கான ரிஸ்க் ஜீரோ ஆகும். இந்த பத்திரங்கள் NCS உடன் இணைக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் மத்திய அரசு என்சிஎஸ் வட்டி விகிதம் +0.35 சதவீதம் வட்டி வருமானத்தை, இந்த ப்ளோடிங் ரேட் பண்ட்ஸுக்கு இந்திய அரசு அளிக்கிறது.
இதையும் படிங்க : Gold : தீபாவளிக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா?.. விலை நிலவரம் என்ன?




அஞ்சலக மாத வருமான திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் ஒரு அசத்தலான திட்டம் தான் இந்த அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் பங்குச்சந்தை போல கவலை கொள்ள தேவையில்லை. எந்தவித ரிஸ்குகளும் இல்லாத முதலீடுகளை தேடும் நபர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஒவ்வொரு மாதமும் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.1,000 முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
இதையும் படிங்க : Gold Price : இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!
இந்த திட்டங்கள் இரண்டு மடங்கு லாபத்தையோ அல்லது அதிக அளவு லாபத்தையோ கொடுப்பவை அல்ல. ஆனால், முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.