சிறு வயதில் மிட்டாய் விற்றவர்.. இப்போது ரூ.2,000 கோடி மதிப்பிலான நிறுவனத்துக்கு அதிபதி.. யார் இந்த ஐசக்!
Aachi Masala Founder's Rs 2000 Cr Success | பூஜியத்தில் இருந்து உழைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், சிறு வயதில் மிட்டாய் விற்ற நபர் ஒருவர் தற்போது சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.
கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அவ்வாறு கடின உழைப்பின் காரணமாக பூஜியத்தில் இருந்து உச்சத்திற்கு சென்றவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் தான், ஒரு காலத்தில் சிறிய கிராமத்தில் மிட்டாய் விற்பனை செய்த சிறுவன் ஒருவர் தற்போது சுமார் 2,000 கோடி மதிப்பு கொண்ட பெரிய மசாலா நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், அவர் யார், பூஜியத்தில் இருந்து உச்சத்தை தொட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆச்சி மசாலா உருவானவது எப்படி? – பின்னணி இதுதான்
தென்னிந்தியாவில் ஏராளமான மக்களால் விரும்பி பயன்படுத்தப்படும் ஒரு மிகப்பெரிய மசாலா பிராண்டாக உள்ளதுதான் ஆச்சி மசாலா. மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள இந்த பிராண்டை உருவாக்கியவர் தான் ஏ.டி.பத்மசிங் ஐசக். ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் ஐசக். இவருக்கு 12 வயது இருக்கும்போது அவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், கணவனை இழந்த தாயால் பல்வேறு சவால்கள் மற்றும் கஷ்டங்களை தாண்டி வளர்க்கப்பட்டார்.
இதையும் படிங்க : Jio IPO Listing: ஜியோவின் அதிரடியான அறிமுகம் – முதன்மையான வணிகக் குழுவாக உருவெடுத்தது ரிலையன்ஸ்




தாயின் சமையல் மூலம் பெரிய பிராண்டை உருவாக்கிய ஐசக்
என்னதான் குடும்ப வருமை உள்ளிட்ட சிக்கல்கள் இருந்தாலும், தனது தாயின் எல்லையற்ற அன்பினால் அவர் வளர்க்கப்பட்டுள்ளார். சிறு வயது முதலே தனது தாய் சமைக்கு சுவையான சமையலை சாப்பிட்டு வளர்ந்துள்ளார் ஐசக். அவ்வாறு சமைக்கும்போது அவரது தாய் பயன்படுத்திய சில தனித்துவமான மசாலக்களே அவர் பிற்காலத்தில் சக்தி மசாலா போன்ற பெரிய பிராண்டை உருவாக்க உருதுணையாக இருந்தது.
இதையும் படிங்க : Gold Price : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. திடீர் மாற்றத்தின் காரணம் என்ன?
இவர் ஆரம்ப காலத்தில் ஃபினைல் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த ஆரம்ப காலம் தான் அவருக்கு அதிக பாடம் கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு தயாரிப்பை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், வாடிக்கையாளர்களின் தேவைகளை தெரிந்துக்கொள்வது எப்படி உள்ளிட்ட சில யுக்திகளை அவர் கற்றுக்கொண்டுள்ளார். அதன் மூலம் தான் அவர் இந்த தொழிலை மிகப்பெரிய அளவில் வளர்த்துள்ளார்.
ஐசக்குக்கு திருமணமான பிறகு அவரது தயார், தனது மனைவிக்கு அவர் செய்யும் மசாலாக்களை கற்றுக் கொடுத்துள்ளார். அப்போதுதான் ஐசக்குக்கு அது குறித்து எண்ணம் தோன்றியது. அதன்படி, 1995 ஆம் ஆண்டு ஆட்சி குரூப் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவ்வாறு படிப்படையாக தனது தொழிலை முன்னேற்றி தற்போது சுமார் ரூ.2,000 கோடி மதிப்புக்கொண்ட நிறுவனத்தை கட்டமைத்துள்ளார்.