AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : தொடர் உயர்வுக்கு மத்தியில் டிவிஸ்ட் வைத்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, இன்று ஒரே நாளில் வெள்ளி ரூ.5,000 சரிவை சந்தித்து விற்பனையாகிறது.

Gold Price : தொடர் உயர்வுக்கு மத்தியில் டிவிஸ்ட் வைத்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Oct 2026 11:02 AM IST

சென்னை, அக்டோபர் 29 : தங்கம் விலை (Gold Price) தொடர்ந்து நான்கு நாட்கள் உயர்வை சந்தித்து வந்த நிலையில் இன்று டிவிஸ்ட் வைத்துள்ளது. அதாவது, இன்று தங்கம் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை (Silver Price) அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, இன்று ஒரே நாளில் வெள்ளி ரூ.5,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் உயர்வுக்கு மத்தியில் டிவிஸ்ட் வைத்த தங்கம், வெள்ளி

இந்தியாவில் பண்டிகை காலம் கோலகலமாக தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக நடை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வந்தது. ஆனால், வெள்ளியோ எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே டிவிஸ்ட் வைத்துள்ளது.

இதையும் படிங்க : தீபாவளிக்கு கார் – பைக் வாங்கபோறீங்களா? இந்த 6 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,395-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதிரடியாக சரிவை சந்தித்துள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.215-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us