AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை ரயிலில் நள்ளிரவில் டமார் சத்தம்.. நெருப்பு பொறியுடன் வெடித்து சிதறிய பவர் பேங்க்.. அலறியடித்த பயணிகள்!

Bangalore To Chennai Train Power Bank Explodes : பெங்களூரில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி உபயோகித்த பவர் பேங்க் திடீரென வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதில், பயணிகள் யாருக்கும் எந்த விதமாக காயமும் ஏற்படவில்லை.

சென்னை ரயிலில் நள்ளிரவில் டமார் சத்தம்.. நெருப்பு பொறியுடன் வெடித்து சிதறிய பவர் பேங்க்.. அலறியடித்த பயணிகள்!
பவர் பேங்க் வெடித்ததில் ஏற்பட்ட தீக்கறை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 30 Oct 2026 16:28 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வியாழக்கிழமை ( அக்டோபர் 29- ஆம் தேதி) இரவு புறப்பட்டது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட கோச்சுகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத கோச்சுகளில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயிலானது கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை வழியாக வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே நேற்று இரவு சுமார் 10:40 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் தனது செல்போனை பவர் பேங்க் மூலமாக சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அந்த பவர் பேங்க் நீண்ட நேரமாக சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ரயிலில் வெடித்து சிதறிய பவர் பேங்க்

இதனால், அதிக அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அந்த பவர் அதிக சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது. இதில், ரயிலின் இருக்கை மற்றும் பவர் பேங்க் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்துக்கான தடம் பதிந்தது. அத்துடன் பவர் பேங்க் வெடித்த கரும் புகை வெளியேறியது. இரவு நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது பவர் பேங்க் வெடித்த சத்தம் கேட்டு அனைவரும் அலறி அடித்துக் கொண்டு எழுந்தனர்.

மேலும் படிக்க: கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!

ரயிலில் பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை

உடனே, இந்த சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் நிலையம் வந்ததும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட கோச்சில் சோதனை மேற்கொண்டனர். பவர் பேங்க் பிடித்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து ரயில் மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது.

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை

இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ து போன்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனைத்து ரயில்களிலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்பொருள்கள் சார்ஜிங் செய்யப்படும் பிளக் பாயிண்ட்டுகளில் மின் விநியோகம் செய்யப்படாது என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபோல, ஏற்கனவே ஒரு சம்பவம் நடைபெற்ற நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. நள்ளிரவில் இரு முறை தட்டப்பட்ட கதவு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!

Follow Us