AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சியில் கோரம்.. 6 வயது சிறுவன் கிணற்றில் வீசி கொலை.. குடும்ப தகராறில் வெறி பிடித்த தந்தை கைது!

Gingee Boy Murder : விழுப்புரம் மாவட்டத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் 6 வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தையை சத்தியமங்கலம் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சியில் கோரம்.. 6 வயது சிறுவன் கிணற்றில் வீசி கொலை.. குடும்ப தகராறில் வெறி பிடித்த தந்தை கைது!
உயிரிழந்த சிறுவன். கைதான தந்தை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Oct 2026 15:45 PM IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றால் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் ( 40 வயது). இவரது மனைவி தேவி ( 35 வயது). தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள், 6 வயதில் சஞ்சய் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கடன் வாங்கிய பணத்தை செலவு செய்தது தொடர்பாக செல்வராஜுக்கும், தேவிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி உள்ளது. தம்பதி இடையே ஏற்பட்ட இந்த தகராறு வெகு நேரம் நீடித்துள்ளது. இதில், வாக்குவாதம் முற்றி தகராறு முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த செல்வராஜ் தனது 6 வயது மகன் சஞ்சயை தூக்கிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடினார்.

விவசாய கிணற்றில் வீசப்பட்ட 6 வயது சிறுவன்

அவர் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றுக்கு சென்று சிறுவனை தண்ணீரில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிலர் கிணற்றுக்குள் குதித்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் படிக்க: கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!

3 மணி நேர தேடலுக்கு பின் சிறுவன் சடலமாக மீட்பு

கிணற்றில் வீசப்பட்ட சிறுவனை தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தேடினர். இதில், 3 மணி நேரம் கழித்து சிறுவன் சஞ்சயின் உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக சிறுவனின் தாய் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இவரை விசாரணை மேற்கொண்டனர்.

சிறுவனின் தந்தை கைது – சிறையில் அடைப்பு

அத்துடன், சிறுவனை கிணற்றில் வீசி கொலை செய்ததாக தந்தை செல்வராஜை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவன், மனைவி தகராறில் சிறுவன் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: கைதிகள் தப்பிய சம்பவம் எதிரொலி.. சிறைத்துறை டிஜிபி திடீர் பணியிட மாற்றம்!

Follow Us