AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்வு!

Tamil Nadu Health Insurance : முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு, ரூ.1.20 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு (அறிவித்துள்ளது. இதன் மூலம், கூடுதலாக லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்வு!
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Oct 2026 17:08 PM IST

சென்னை,அக்டோபர் 30 : முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு, ரூ.1.20 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு (TN Government) அறிவித்துள்ளது. இதன் மூலம், கூடுதலாக லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மத்திய அரசுத் திட்டத்துடன் இணைப்பு

இதுவரை, மாநில அரசின் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும், மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டமும் தனித்தனியாகச் செயல்பட்டு வந்தன. இனி, இந்த 2 திட்டங்களும் ஒருங்கிணைந்த ஒரே திட்டமாக செயல்படும் என்றும் ஒரே காப்பீட்டு அட்டையைக் கொண்டு இரண்டு திட்டங்களின் பலனையும் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு?

இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை, 2027 ஜனவரி 11 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்துவதற்காக, பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகம் டெண்டர் கோரியுள்ளது. தேர்வு செய்யப்படும் காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களைச் சரிபார்த்து ஒப்புதல் வழங்குவதுடன், நோயாளிகளின் சிகிச்சைக்கான நிதியையும் விடுவிக்கும். பொதுத்துறை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதால், நிதி விடுவிப்பில் தாமதம் போன்ற சிக்கல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன சிகிச்சைகள்?

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும் புற்றுநோய் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, சிறுநீரகம், கல்லீரல் தொடர்பான சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்துச் சிகிச்சைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

யாருக்குத் தகுதி?

தமிழ்நாடு குடும்ப அட்டை அல்லது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுத் தரவுத்தளத்தில் பெயர் இடம்பெற்றுள்ள ஒருவரின் மொத்தக் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால், அவரும் அவரது குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெறத் தகுதியுடையவர்கள் என கூரப்படுகிறது. இதற்கான காப்பீட்டுக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும். ஏற்கனவே முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள், புதிய ஒருங்கிணைந்த திட்டத்தில் தானாகவே சேர்க்கப்படுவார்கள்.

தேவைப்படும் ஆவணங்கள்

இந்தத் திட்டத்தில் சேர, குடும்ப அட்டையுடன், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய்த் துறை அலுவலர்களால் இணையவழியில் வழங்கப்படும் வருமானச் சான்றிதழையும், குடும்பத் தலைவரின் சுய அறிவிப்பையும் சமர்ப்பித்தால் போதுமானது. வெளிப்படைத்தன்மைக்காக, அனைத்துப் பயனாளிகளின் விவரங்களும் அரசின் சரிபார்ப்புக்குப் பிறகு உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

இதையும் படிக்க : விமானத்தை விட 3 மடங்கு உயரம்.. மினி சாட்டிலைட்டை விண்ணில் ஏவிய மாணவர்கள்.. கோவையில் நடந்த நிகழ்வு!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் காப்பீடு

பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பிற மாநிலத்தவர்களும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். அவர்கள் தமிழகத்தில் 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தால், அவர்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தைத் தொழிலாளர் நலத் துறை மூலம் செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow Us