AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சொந்த ஊர் செல்ல பணம் தேவை.. மருமகன்- மாமியார் கூட்டு சேர்ந்து கொள்ளை.. தஞ்சாவூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Thanjavur Crime : தஞ்சாவூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, வெள்ளி பொருள் மற்றும் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்ற மாமியார் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

சொந்த ஊர் செல்ல பணம் தேவை.. மருமகன்- மாமியார் கூட்டு சேர்ந்து கொள்ளை.. தஞ்சாவூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
நகை திருட்டில் ஈடுபட்ட இருவர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Oct 2026 17:14 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை ராஜலட்சுமி நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர், ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் கடந்த அக்டோபர் 23- ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல வேலைக்கு சென்றனர். பின்னர், பிற்பகலில் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொள்ளை அடிக்க பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர், இது தொடர்பாக திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார்.

2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை

அந்த புகாரின் பேரில், திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் அழகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, டிஎஸ்பி அழகேசன் உத்தரவின் அடிப்படையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரிய திமுக பெண் கவுன்சிலர்!

வங்காளதேசத்தை சேர்ந்த பெண்- அவரது மருமகன்

அதில், சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். இதில், அந்த பெண் வங்காள தேசத்தை சேர்ந்த ஹானா பேகம் ( 59 வயது) என்பது, அந்த ஆண் நபர் சென்னை மாவட்டம், சூளைமேட்டை சேர்ந்த குணசேகரன் ( 40 வயது) என்பதும், இவர் ஹானா பேகத்தின் மருமகன் என்பதும் தெரிய வந்தது. இதே தொடர்ந்து, இருவரையும் தேடி பிடித்து கைது செய்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

வங்கதேசத்துக்கு செல்ல பணமில்லாததால் நகை திருட்டு

இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது, வங்காள தேசத்தை சேர்ந்த ஹானா பேகத்தின் மகளுடன் குணசேகரனுக்கு பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரையும் வங்கதேசத்துக்கு ஹானா பேகம் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். ஆனால், அதற்கு அதிக பணம் தேவை இருந்ததால் கார்த்திக் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதும், அதில் வரும் பணத்தின் மூலமாக வங்காள தேசத்துக்கு செல்ல திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க: இதெல்லாம் சரியா? தவெக எம்எல்ஏவின் குழந்தையை கவனிக்கும் பெண் அதிகாரிகள்.. பல்லவி கண்ணில் படாமல் தெறித்து ஓடும் அலுவலர்கள்?

Follow Us