AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காரில் லிப்ட் கொடுத்து பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி அளித்த புகார்.. கன்னியாகுமரி தவெக நிர்வாகி அதிரடி கைது!

Kanyakumari TVK Functionary Arrested : கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவிக்கு காரில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் தக்கலை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

காரில் லிப்ட் கொடுத்து பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி அளித்த புகார்.. கன்னியாகுமரி தவெக நிர்வாகி அதிரடி கைது!
கைதான தவெக நிர்வாகி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Oct 2026 15:06 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வருபவர் கிறிஸ்டோபர். இவர், கடந்த அக்டோபர் 20- ஆம் தேதி குலசேகரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக பேருந்துக்காக மழையில் காத்துக் கொண்டிருந்த 2 மாணவிகளுக்கு தனது காரில் லிப்ட் கொடுத்து அழைத்து வந்துள்ளார். இதில், ஒரு மாணவியை அவரது வீட்டில் இறக்கி விட்ட கிறிஸ்டோபர் மற்றொரு மாணவியை தனது காரில் அவரது வீட்டில் விடுவதற்காக அழைத்து சென்றார். ஆனால், செல்லும் வழியில் காரை நிறுத்திய கிறிஸ்டோபர் திடீரென அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

காரில் லிப்ட் கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை

இதை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி சத்தம் போட்டுக் கொண்டு காரில் இருந்து குதிக்க முயன்றார். இதனால், அச்சம் அடைந்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் காரை நிறுத்தி விட்டு அந்த மாணவியை நடுவழியில் இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் கடந்த 22- ஆம் தேதி தக்கலை காவல் நிலையத்தில் கிறிஸ்டோபர் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

மேலும் படிக்க: கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!

கேரளாவில் பதுங்கியிருந்த தவெக நிர்வாகி அதிரடி கைது

இதை அறிந்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் கேரளாவுக்கு தப்பி சென்று தலைமறைவானார். இதில், அவரை கைது செய்வதற்காக மாவட்ட எஸ்பி உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

தவெகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, பாலியல் தொந்தரவு விவகாரம் தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக்கு தெரிய வந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தக்கலை ஒன்றிய பொருளாளர் கிரிஸ்டோபரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக தவெக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. கைதான கிறிஸ்டோபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க: இதெல்லாம் சரியா? தவெக எம்எல்ஏவின் குழந்தையை கவனிக்கும் பெண் அதிகாரிகள்.. பல்லவி கண்ணில் படாமல் தெறித்து ஓடும் அலுவலர்கள்?

Follow Us